தமிழ் புத்தாண்டு

விளம்பி எனும் தமிழ் மகள்
விளங்கவே வந்தாள் தேனாய்
அரும்பிய மலராய் இளமலர்போல
விரும்பி வந்தாள் காலமகள்
பன்னிரு திங்கள் நம்முடனே
இன்னிசையாய் இருந்தே
நன்மையும்தீமையும் ஒன்றென
சிந்தையில் வாழ்ந்தே சீரான
வாழ்வைபெற்றே வாழ்ந்திட
தேவகி மைந்தனைவணங்குவோம் !
காலமகள் கண்திறப்பாள்
மகிழ்வுவாழ்வோம்பன்னிரு
திங்கள் !!!

எழுதியவர் : பந்தார்விரலி (13-Apr-18, 10:57 pm)
Tanglish : thamizh puthandu
பார்வை : 181

மேலே