முத்திரை குத்தாத சித்திரை

ஆண்டென ஆட்சி புரியும்
அரசனுக்கு மூத்தவனாய்
முத்திரைக் குத்திக்காத
சித்திரையே விசித்திரனே

தை என்கிறார் ஆவணி
என்கிறார் வள்ளுவராண்டு
என்கிறார் சித்திரை என்கிறார்
எதுவானாலும் நம்பினோர்க்கு
நடை ராஜன் நம்பாதார்க்கு
எமன் ராஜனென்ற பாணியில்

பொன்னான அந்நாள் வந்திட்ட
இந்நாளிலேனும் காவிரியை
உந்தன் கூடவே அழைத்துக்
கொணர ஆயத்தம் செய்வீரா

காய்கிற கழணிக் காடெலாம்
வெடி ப்புற்ற ந்தவெடி பினிலே
மரண மெனும் மாபாதகனோ
குடிகொண் டுள்ள தறியீரோ

காய்கிற காய்சலுக் கிங்கே
மேய்கிற பிராணி யெல்லாம்
மாய்கிறதை தடுத்து நிருத்திட

சாய்கிற மரஞ்செடி க்கொடியும்
ஜல மில்லா க்காரணத்தால் வேர்
தீய்ந்திட பறக்கிறது காற்றோடு

தேய்கிறது சோடுடை சோடற்ற
பாதங்கள் நீருக்கு குருதி சிந்த
யாருக்கு மக்கறை யில்லையே

ஓய்கிறது உள்ளங்கள் உதவிட
நித்திரை நயணமதில் பொட்டு
மின்றி மாத்திரை சுகம் தருமா

யாத்திரையா யேனும் சென்று
மத்திய சர்காரான் முகத்திரை
கிழித்தெரிந்திட மாட்டாயோ
மனித த்தன்மை மனதிலிர

°°°°°°°°°°
ஆபிரகாம் வேளாங்கண்ணி
மும்பை/ மகாராஷ்டிரம்
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்"

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (14-Apr-18, 2:15 pm)
பார்வை : 66

மேலே