மனதின் எழுச்சி

துளிர்விட்ட துணிச்சலைத் தூக்கிக் கொண்டு
துன்பத்தைத் துடைக்க வருகிறேன்
தூயவை நீங்க தூபம் போடும்
துஷ்டர்களைத் துரத்தி அடிக்க வருகிறேன்
ஆதரவு விடுத்து அகம் ஆர்ப்பரிக்க
இனி எனக்கு நானே வீரன் என மனம் முழக்கமிட்டது
தனியாய் வாழ பழகிக்கொள்
தவறுகளை உணர்ந்து ஓப்புக்கொள்
தடைகளைத் தகர்க்க கற்றுக்கொள் என
என் மனம் எனக்கே பறைசாற்றியது
எழுச்சியுடன் உயிர்த்தெழுந்ததது
தவறுகளை எதிர்க்கத் துணிந்தது..

எழுதியவர் : ஸ்ரீ (14-Apr-18, 2:38 pm)
Tanglish : manathin ezuchi
பார்வை : 119

மேலே