காத்திருப்பு

ஐயிரண்டு திங்களாய் கருவை சுமந்தவள் தான் சுமந்த சுமையை இறக்கி வைத்து இளைப் பாறக் காத்திருப்பு
கிழங்களை காத்திடலென் கடமையே யாயினும் செய்யும் தொழிலை கைவிடலாகுமோ போதுமடா சாமி இதுகள் மண்டையை போடும்
எப்போது நான் நிம்மதியாய்
இருப்பதுஎப்போது என்று
காத்திருப்பு பிள்ளைகளுக்கு
நமக்கு என்று நல்ல காலம் ஒன்று என்றுதான் பிறந்திடுமோ ஞாலம் அழியும் வரையோ இக் "காத்திருப்பு"
தாலி கட்டி தன்னை தனிமை படுத்திவிட்டு பட்டாளம் சென்றுவிட்ட கணவன் என்று தான் வருவாரோ
என்ற காத்திருப்பு புதுப்புது
மனைவி மார்களுக்கு
படிப்பை படித்து முடித்து விட்ட பிள்ளைகளுக்கு வேலை வெட்டி
கிடைக் காதா நம் காய்ந்த மன நிலங்களிலும் அந்த மடை திறந்து விடப்பட்டு ஆனந்த நீர் வந்து
பாயாதா என்ற காத்திருப்பு
பெற்ற நல் உள்ளங்களுக்கு
மும்மாரி பொழிந்து முப்போகம் விளைந்த காலங்களை நினைவில் கொண்டு மேழி பிடித்து நிலங்களை நைய உழுது வைத்து வித்தை கரங்களில் ஏந்தி காத்திருப்பு
உழவர் கூட்டத்திற்கு
குடும்ப அட்டையிலே அரிசி பருப்பு சீமை எண்ணெய் சர்க்கரை போட்டுத்
தீர்ந்து விடுமோ என்று பல்லைகூட துளக்காமல் நீராகாரம் அருந்தாமல் காலி வயிறாக முதல் ஆளாக வரிசையில் காத்திருப்பு
உயிருக்கு உயிராக காதலித்தவள் கைவிட்டு கடல் கடந்து சென்று விட்டாள்
மனம்மாறி மறுபடியும் வந்தென்னை கைக் கோர்ப்பாள் என்ற காத்திருப்பு காதலனுக்கு
காத்து இருப்பதிலும் தனி ஒரு சுகமிருக்கு அச்சுகத்தை அறிவதற்கு
இதயத்திற்கு எங்கே பொருமையிருக்கு
அறிவு வந்து ஆறுதல் கூற அதை கேட்க
இதயமில்லை அரைக்கிறுக்கு
கடலோர கரையினிலை
கண்கள் இரண்டு காத்திருப்பு
அவ்விரண்டு கண்களிலும் தன் காதலியின் எதிர் பார்ப்பிருக்கு
காத்திருப்பு வெறும் காத்திருப்பா யிருந்திடாது கண்டுவிட்டேனென்ற வாய்த்திறப்பும் கொஞ்சம்
வாய்த்திருக்கட்டுமே•••!
•••
ஆபிரகாம் வேளாங்கண்ணி எழுதிய
"காத்திருப்பு" கவிதைமணியில்