ஒரு காதல் வந்துச்சோ பகுதி -7 அடுத்த பகுதியில் முடியும்

காட்சி 9

இடம்: கதிர் வீடு

நேரம்: மாலை 5 மணி 58 நிமிடங்கள்

(சுசீலா வருகிறாள்.)

கதிர்:------- ஹாய்! ஷார்ப்பா வந்திட்டயே. வா வா

சுசீலா: ------- ஹாய் கதிர். வர சொல்லிருந்தன்னு விஜி சொல்லித் தெரியும்? என் நம்பர் என்னாச்சு? எனக்கேன் கால் பண்ணல?

கதிர்: ------- வெயிட் வெயிர்....இவ்ளோ கேள்விகள் கேட்டா...கன்ஃப்யூஸ் ஆகிடுவேன்....
முக்கியமான விஷயமாத்தான் வர சொன்னேன். என் ரூம்ல உனக்காக யாரோ வெய்ட் பண்றாங்க. நீ போய் பேசிட்டு இரு. நான் அப்புறம் வரேன்.

(சுசீலா உள்ளே நுழைகிறாள். அங்கே நவீன் ஆழ்ந்த யோசனையில் அமர்ந்திருக்கிறான் )

[ சுசீலாவின் வயிற்றில் பட்டாம்பூச்சி தவிர வேறு பூச்சிகளும் கலவையாய் பறந்து ஒன்றோடொன்று மோதிக்கொண்டது ]

சுசீலா: ------- ஹல்லோ நவீன்! என்ன இந்த பக்கம்?

நவீன்: ------- சும்மா கதிர பார்த்துட்டு போலாம்ன்னு தான், அப்டீன்னு சொன்னா நீ நம்ப போறதில்ல....உன்னை நான்தான் கூப்பிட்டேன்னு உனக்கே தெரியும். சோ, உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்.

[ சுசீலாவுக்கு என்ன பேசுவது என்றே தெரியாமல், மேலே பார்த்து, பக்கவாட்டில் பார்த்து, இறுதியாக சுவற்றில் பார்வையைப் பதிக்கிறாள் ]

நவீன் ------- : உனக்கே தெரியும்.. என்னோடது ·பைனல் இயர் எம்.டெக்.
காம்பஸ் இன்டர்வ்யூலையே செலெட் ஆகிருக்கேன். அதனால எனக்கு 'xyz' கம்பனில வேலை கிடைச்சிருச்சு.

சுசீலா:------- வாவ்.....கங்க்ராஜுலேஷன்ஸ்....இது எதிர்பார்த்தது தானே.... வாட் நேக்ஸ்ட்?
நவீன்: இன்னும் ரெண்டு மூணு மாதத்தில எனக்கு ட்ரெய்னிங்க். பரோடா போக வேண்டி வரும்.

( நவீன் தொண்டையை செறுமிக் கொள்கிறான், அது எசகுபிசகாகி தொண்டை கட்டிக்கொண்டது போல் கீச்சென்று ஒலிக்கிறது )

சுசீலா: ------- கிரேட்.......ஓ அதான் பிஸியா? சில நாளாக ஃபோன் மேஸ்ஸேஜ் எதும் காணமே

நவீன்(கனைத்தபடி): ------- அதெல்லாம் ஒண்ணும் இல்லை.... ட்ரைய்னிங் முடிஞ்சு பெர்மனென்ட் ஆக்கிடாங்கன்னா லைஃப்ல செட்டில் ஆகிடுவேன்

சுசீலா: ------- ஆஹா!....அப்ப இனிமே என்னையெல்லாம் மறந்து பொய்டுவ...இதான் நீ சொன்ன சர்ப்ரைஸா?

நவீன்:------- ஹ்ம்ம்.....ஆமாம்..... அப்புறம் நீ என்ன பண்ணப் போற

சுசீலா: ------- இனிமேத்தான் யோசிக்கணும். ஒண்ணும் பெரிய ப்ளான் இல்ல, கண்டிப்பா மேல படிக்கறதா இல்ல. மே பீ சின்னதா "all purpose boutique" வெக்கலாமானு ஐடியா.

( நவீன் கிட்டதட்ட சாயம் போன கலருக்கு வெளிறி வார்த்தையைத் துப்புகிறான். )

நவீன்:------- நீ என்னோட வர ரெடின்னா நானே போடீக் வெக்க ஹெல்ப் பண்ணுவேன்

சுசீலா:------- எங்க வரணம்? மாம்பலமா? அண்ணா நகரா? அங்க தான் இதுக்கு மெட்டீரியல்ஸ் சீப் ரேட்-ல பிக் பண்ணலாம். முதல்ல எக்ஸாம் முடியட்டும்.

நவீன்:------- நான் அத சொல்லல

சுசீலா: பின்ன?

நவீன்: ------- ooph You are not helping me....not helping me at all.

[ சுசீலா பொங்கி வரும் புன்னகையை மறைக்க உதட்டை இறுக்க குவிக்கிறாள். முகம் அஷ்ட கொணலாகி விட்டதோ என்ற பயத்தில் வேறு புறம் திரும்புகிறாள். ]

[ நவீன் அசடு வழிந்தபடி சடாரென ஒற்றைக் காலில் முட்டி போடுகிறான் ]

[ திடீரென அவன் கீழே விழுந்து விட்டான் என்று நினைத்து முதலில் சுசீலா பதறுகிறாள். பிறகு அவள் முகம் அன்றைக்கு அரைத்த தக்காளிச் சட்டினி போல் சிவக்கிறது. ]

[ நவீன் பூங்கொத்து ஒன்றை நீட்டுகிறான். ]



சுசீலா: ------- என்னது

நவீன்: ------- பூ!

சுசீலா: ------- அது தெரியுது. எனக்கு பிறந்த நாள் கூட இல்லையே ...அப்றம் எதுக்குன்னு கேட்டேன்.

நவீன்:------- தெளிவா இருக்கனும் சுசீ. இது என்னதுன்னா, அதான் பூன்னு சொன்னேன்.

சுசீலா: T------- his is not getting anywhere.... எனக்கு வீட்டுக்கு போகணம். இப்ப எதுக்கு பூ, டக்குனு சொல்லிடு பார்போம்.

நவீன்: ------- இந்த... இந்தப் பூ பிடிச்சிருக்கா?

சுசீலா: ------- ஏன்? நீ தான் ரோஜாசெடியவே நட்டியா?

நவீன்(கோவமாக): ------- நீ என்னை ரொம்ப டீஸ் பண்ற.

சுசீலா: ------- எனக்கு எப்பவுமே ரோஜா ரொம்ப புடிக்கும்.....பூவெல்லாம் ஒக்கே தான். ஆனா ரொம்ப உதிர்ந்து போயிருச்சு

நவீன்: ------- பயத்துல இருக்கமா பிடிச்சேனா... அதான் உதிர்ந்திருச்சு.

சுசீலா: ------- பயமா? எதுக்கு?..... இன்னும் நீ எதுக்கு பூன்னு சொல்லல...

( நவீனுக்கு campus interview இதை விட எளிமையாக இருந்ததாக தோன்றுகிறது)

நவீன்: ------- அந்த குப்புவுக்கு சரின்னு சொல்லிட்டியா?

சுசீலா: ------- குப்புவா?? யாரது

நவீன்: ------- உன்னோட ஃபியான்ஸ்னு சொன்னியே

சுசீலா:------- அப்படியெல்லாம் எனக்கு யாரும் இல்ல...நான் சும்மா வம்புக்கு சொன்னேன்.

( நவீன் மனதில் அக்கால காதல் மன்னர்கள் வரை இக்கால புதிய ரோமியோக்கள் வரை எல்லோரும் ஆசீர்வதித்து தெம்பு வழங்கினார்கள் )

சுசீலா (அழ மாட்டாத குறையாய்) : ------- இப்பவானும் சொல்லிடு.... பூ எதுக்கு?

( காலையிலிருந்து பத்து படங்களில் வரும் காதல் காட்சிகளையும் வரிகளையும் மனப்பாடம் செய்து வைத்திருந்தான். இருந்தாலும் எல்லாம் மறந்து விட்டிருந்தது )

நவீன்: ------- எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு....உனக்கு என்னை பிடிக்குமா?

(சுசீலா கண்ணை மூடிக்கொண்டு தலையை மேலும் கீழும் ஆட்டுகிறாள்)

நவீன்:------- I have fallen in love with you. Will you marry me?

சுசீலா(வீரக் குரலில்): ------- தமிழ்ல கேட்டாத்தான் என்ன!

நவீன்: ------- அம்மாடி தல விரிச்சு போட்டு ஜீன்ஸ் போட்டிருக்குற மரத்தமிழச்சியே.....பதில சொல்லு.

சுசீலா (மறுபடியும் கண்ணை மூடிக்கொள்கிறாள்) : ------- எனக்கும் சம்மதம். ஆனாலும் ரொம்ப ட்ராமாட்டிகா ப்ரொபோஸ் பண்ற.

( இருவர் மனதிலும் காதல் தேவதைகள் என்று சொல்லிக்கொண்டு சில பேர், தப்பு தப்பாய் ஸ்டெப் போட்டு டான்ஸ் ஆடினார்கள் )

நவீன்:------- குப்புனு ஒரு வில்லன் இருக்குறதா நினைச்சிடு இருந்தேனா. நீ என்ன ரிஜெக்ட் பண்ணிடுவியோனு பதட்டம்.

சுசீலா: ------- வில்லன் நமக்கு நாமே தான். சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய நேரத்துல சொல்லாமயே விட்டுட்டா, அப்புறம் அது சொல்லாமையே நம்ம விட்டு போயிடும்

நவீன்(கோவத்துடன்):------- நீ தானே குப்புன்னு உளறிட்டு போன...எதுல விளையாட்டுன்னு அறிவே இல்லையா?

சுசீலா: ------- ரெண்டு மாசம் முன்ன உன்ன பார்த்தனே அப்பவே அறிவு டாட்டா சொல்லிடிச்சு.
நவீன்: அப்ப குப்புன்னு யாருமே இல்லயா?

சுசீலா:------- இருக்கானே...என் அத்த பையன்...இந்த பிரச்சனையெல்லாம் வரக்கூடாதுன்னு சில வருஷம் முன்னமே அவனுக்கு ராக்கி கட்டிட்டேன்.

சுசீலா: ------- அடேங்கப்பா! கடைஞ்சு எடுத்த கெட்டிக்காரியா இருக்கியே .

[ சுசீலா வெட்கப்படுகிறாள் ]

நவீன்:------- நீ..ஏன் அடிக்கடி கண்ணை மூடிக்குற? நான் என்ன அவ்வளவு மோசமாகவா இருக்கேன்?

சுசீலா: ------- உன் பேரன்ட்ஸ் கிட்ட சொல்லி, அவங்களொட வீட்டுக்கு வந்து என் அம்மா அப்பா கிட்ட பேசணும். ஓகேவா?

நவீன்: ------- அதெல்லாம் ஓகே தான். ஆனா உன்னை பொண்ணு பார்த்தும் திடுமின்னு, "எனக்கு கல்யாணம் வேண்டாம்" னு சொல்ல கஷ்டமா இருக்கு..

[ சுசீலா கேள்வியுடன் பார்க்கிறாள் ]

நவீன்:------- அதாவது....."உன் படிப்பு முடியற வரை.."

சுசீலா: ------- சே! கேவலமான இடத்துல ஒரு pause...ஆனாலும் ரொம்ப டிவி சீரியல் பார்த்து கெட்டுப் போயிருக்க நீ.

நவீன்: ------- எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா....அவ கிட்ட நீ ரொம்ப அழகா இருப்பனு பொய் வேற சொல்லிருக்கேன். அது வேற கவலையா இருக்கு.

[ சுசீலா முறைக்கிறாள் ]

நவீன்: ------- சரீஈ..... இவ்ளோ ஸ்வீட் ப்ரபோசல்க்கு ஸ்பெஷலா ஒண்ணும் கிடையாதா?

சுசீலா: ------- ஸ்பெஷல் தானே.....ராத்திரி மேக்கப் எல்லாம் கலைச்சிட்டு ஒரிஜினல் ஃபோட்டோ அனுப்பறேன்

(நவீன் அலறுகிறான்.....)

(சுசீலா அவன் மூக்கை வலிக்கும்படி திருகிவிட்டு வீட்டுக்கு செல்கிறாள்)

( உடனே கதிர் உள்ளே நுழைகிறான்)

கதிர்: சுசீலா அவன் மூக்கை வலிக்கும்படி திருகிவிட்டு வீட்டுக்கு செல்கிறாள்)

( உடனே கதிர் உள்ளே நுழைகிறான்)

கதிர்: -------என்னடா...அவளுக்கு முகம் சிவக்கும்னு நினைச்சா, கடைசீயில உனக்கு மூக்கு சிவந்திருக்கு?

நவீன்: --------அடப்பாவி! உடனே வந்திட்டியே....இங்க தான் இருந்து ஒட்டுக் கேட்டியா?

கதிர்(கோபத்துடன்) : ------சீச்சி. அந்தப் பழக்கமெல்லாம் எனக்கில்ல. கதவை முழுக்க திறந்து வெச்சு, ஓபனாவே கேட்டேன்.

(அடுத்த பகுதியில் முடியும்)

எழுதியவர் : ஷக்திப்ரபா (16-Apr-18, 12:00 pm)
சேர்த்தது : Shakthiprabha
பார்வை : 272

சிறந்த நகைச்சுவைகள்

மேலே