நம்ம பையன் கில்லாடிங்க - நகைச்சுவை

கணவன் : ஏண்டி, கமலம் (மனைவி), நம்ம பையன்
மனசில என்னதாண்டி நெனச்சிண்டிருக்கான்,
நாம வயத்தக்கட்டி, வாயைக்கட்டி படிக்கவெச்சா
இப்படி கண்டா பசங்களோட ஊற சுத்தி வெத்து
விளையாட்டு ஓட்டப்பந்தயம் பின்னால சுத்தி
வாரான், உறுப்படுவானடி, நீயும் ஒன்னும்
வாய தயக்கமா இருக்க, செல்லம் குடுத்துண்டு.......

கமலம் : ஏங்க, நான் சொல்லறதை கொஞ்சம் சரியா
கேட்டுக்கோங்க, அப்புறம் விஷயம் என்னனு
தெரிஞ்சிப்பீங்க.....நீங்க பாட்டுக்கு வேல
வேலைன்னு சதா டூர்ல போயிடுறீங்க...இங்க
என்ன நடக்குதுன்னு தெரியாம, உங்க புள்ள
வெத்தா விளையாடலைங்க, அவன் ஓட்ட
பந்தயத்துல மாகாணத்துல முதலிடம்,
தங்கப் பதக்கம், ஹை ஜம்ப் ல முதலிடம்,
தங்கப்பதக்கம் , அப்புறம் கேம்பஸ்
தேர்வுல, ரைல்வேஸ் அவனுக்கு ஸ்போர்ட்ஸ்
கோட்ட ல ஸ்போர்ட்ஸ் ஆஃபீஸ்ர் ஆக தேர்வு
செஞ்சிருக்கு, இப்பதான் அவன் ரிசல்ட் வந்திச்சு
அதிலேயும் அவன் இரண்டாம் வகுப்புல பாசுங்க
அவனுக்கு, அவன் தேர்ந்தெடுத்த துறை
'விளையாட்டு' அதில அவன் முதலிடம் ..இன்னும்
என்னவேணுங்க......சும்மா அவனை
கரிச்சிகொட்டாரங்க......................

கணவன் : அப்படியாடி விஷயம்................இது
தெரிஞ்சிக்காம ஏதேதோ சொல்லிப்புட்டேன்...
சரி, எல்லோரும் என்ஜினீயர் , ஐ.எ.எஸ் னு
ஆக முயற்சி செய்வதும், நாம பெற்றோர்கள்
வற்புறுத்துவதும் தப்புனு இப்போ நல்லா
புரிஞ்சிகிட்டேனடி......அவனவனுக்கு எதில்
விருப்பமோ அதுல படிக்கவிடனும் ............

கமலம் : எப்படியோ புரிஞ்சிக்கிட்டிங்களே
சந்தோசம்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Apr-18, 3:55 am)
பார்வை : 287

சிறந்த நகைச்சுவைகள்

மேலே