தரையில் போகுது பிண ஊர்வலம்

விடியக் கூவிய கோழி
மதியத்தில் மனிதனுக்கு உணவானது
மதியத்தில் உண்ட மனிதனுக்கு
மாலையில் மாரடைப்பில் சாவு !
இயற்கை நியாயம் செய்கிறதோ ?

விடிகாலை வேளையில்
தரையில் போகுது பிண ஊர்வலம்
கூரையில் கோழி கூவவில்லை !
இறந்தவனுக்கு மௌன அஞ்சலி செய்கிறதோ ?
இல்லை இல்லை
மதிய விருந்திற்காக அதிகாலையிலேயே மௌனமாகிவிட்டது கூவல் ஜீவன் !

யாருக்கு யார் அஞ்சலி ?

எழுதியவர் : கவின் சாரலன் (17-Apr-18, 9:25 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 52

மேலே