பாதச் சுவடுகள்
![](https://eluthu.com/images/loading.gif)
சிலர் பாதச் சுவடுகளே சிலர்
வாழ்வை நிர்ணயிக்கும் என்ற நம்பிக்கை சிலருக்குண்டு; அந்த
வாழ்வு கிடைக்கப் பெற்றால்
அந்தக் காரண கர்த்தாவை
வாழ்த்த வார்த்தை இல்லை;
சுவடுகள் காணும் போதெல்லாம்
பின் தொடர மனம் சொல்கிறது;
நல்ல காலம் என்று ஒன்று உண் டென்றா லதில் உனக்கும் பங்குண்டு என்ற நம்பிக்கை பிறக்கிறது;
இன்ப பாதையோ அது துன்பப் பாதையோ; இரண்டினையும் கற்றாக வேண்டும் என்பது கட்டாயம்; நன்மை தீமை ஐயமுற அறிந்திடலாம்; அதில் விரும்பியதை ஏற்று நாமும் சுக வாழ்வை வாழ தொடர்ந்திடலாம்; என் பதனை கற்ப்பிக்கும் குருகுலம் அது;
யார் யாரோ சென்ற பாதையில்
நான் செல்ல வேண்டுமா என
கேட்க நாவெழாது;
உன் மனம் போகும் பாதை
சரியென படுமானால்;
அதை நீ கேட்டு நட;
நல்லது நடந்து விட்டால் அது உன் அதேஷ்டம்; அதுவே கெட்டது நடந்து
விட்டால் அது உன் துரதிரிஷ்டம்;
சமுகம் வாழக் காட்டிய அன்பு நன்றி கருணையை பின் தொடர வேண்டிய பாதச் சுவடுகள் என்பினும்; சிலர் வாழத்துடிக்கும் மது மாது சூதெனும் அழிய போகும் பாதச் சுவடுகள்; படுபாதாளத்தில் தள்ளிடும்;
ஒன்று சொர்கத்திற்கு அழைத்துப் போகும்; மற்றொன்று நரகத்திலே வேகப் போகும் பாதச் சுவடுகள்;
பாதச் சுவடுகள் பல உண்டு
அவற்றை இடம் பொருள் ஏவலை உணர்ந்து பயணிக்க பலன் உண்டு;
அப்பாதச் சுவடுகளை தேர்வு
செய்வது அதற்காக மகான்களைத் தேடித்திரிவதன்று;
அக்கம் பக்கம் உள்ளோரும் நல்லொழுக்கம் நற்பண்பினை
தவறாது கடை பிடிப்போரையும்
நாமும் கடைபிடிக்கலாமே
அவற்றை நிர்ணயிப்பது நம் மனமேயன்றி வேறில்லை.
••
ஆபிரகாம் வேளாங்கண்ணி எழுதிய
" பாதச் சுவடுகள்"
கவிதைமணியில்