துணையாய் தொடரும் நிழல்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
உன் ஒருவனையே நேசிக்கும் அந்த அன்பெனும் மரத்து நிழலில் நான் படரும் கொடியாக வேண்டும்
அந்த கொடியில் மலரும் மலராக மலர்ந்து உதிர நேர்ந்தால் உதிரும்
இடம் உன் மடியாக வேண்டும்
அந்த நொடியிலேயே என்
உயிர் மடிந்தாலும் உன்னை" துணையாய் தொடரும் நிழல்கள்" அன்றே மறைந்து போயாகிவிடும்
அதைக்கண்டு உன் கரங்களில்
என்னை கட்டி அணைத்து பிடித்திட
அந்த பிடியில் தீத் தடியால் தீய்த்து நான் பறக்கும் சாம்பல் பொடியாக வேண்டும்
வாழ்ந்தால் உன் நிழலில் தான் வாழ்ந்தாக வேண்டும் அது எனக்கு வாய்கவில்லை என்றால் நான் ஏன் பிறந்தேன் நான் ஏன் உன்னை
நினைத்தேன் என்றே என் நிழல்
அன்றே மறைந்தாக வேண்டும்
நான் இளைப்பார தேர்ந்த நிழலில் எனக்கு முன் வேறு யாரும் முந்தி விடுவரோ என்ற அங்களாய்ப்பில்
உம்மையே சுற்றிச் சுற்றி வருகிறேன் என்பதற்காக காமுகி என்று முத்திரை
குத்திவிட வேண்டாம்
உன் நிழல் சாக்கடையில் இருந்தாலும் பூங்கா வனத்தில் இருந்தாலும்
எனக்கொரு கவலை இல்லை
இதற்கு மேலும் இறங்கிவர
எனக்கு வேறு படிகள் இல்லை
••
ஆபிரகாம் வேளாங்கண்ணி எழுதிய
"துணையாய் தொடரும் நிழல்கள்"
கவிதைமணியில்