ஆவல் நிறைவேறுமா ஆசை உடன் தீருமா
மஞ்சள் தோகை அணிந்து
மயிலாள் நடந்தாள்
பசுமை அணிந்து பருவ
வயலில் மிதந்தாள்
கருப்பு வர்ணம் தீட்டிய
இளம் பிறை இமைகள்
பழுத்துச் செறித்து மிகைத்துச்
சிவந்தன இதழ்கள்
நிலவு வந்து குடிகொண்டது
இவளது முகம்
கரும் மேகம் ஓய்வெடுக்க
ஒழிந்தன கூந்தல்
மணக்கும் உடல் இவள்
அழகு மலர்ப் பந்தல்
என் நெஞ்சின் பாசை
இவ்ளோ நினைவின் ஓசை
ஆக்கம்
அஷ்ரப் அலி