என் செய்வாய் இன்னொர் பிறவியில் என்னவளே

என் செய்வாய்?
இன்னொர் பிறவியில்...
மலராய் பிறந்தாய்
இப்போதே
காற்றென நான் தாண்டிட்ட
உன் வேர்களை...?
நேச ஒலியின் நுகர்வு
துகள்களை
செவிடென இமை மூடி
காதினை மடக்குவாயோ?
என் நினைவுகளின் தாகத்தால்
வளிந்து ஓடிடும்
உன் கண்ணீர்
துளியில் 
ஏதோ ஓர் புள்ளி 
உப்பு நீரை 
காலின் சுண்டு விரலில் 
தடவி பார்ப்பாயோ நானென.. 
என் முகம் தெறியுமா?
இப்பொழுது பாயும்
உன் இதய இரத்தத்தில்
இருக்கும் என் பிதற்றல்கள்
அப்பொழுது...?
உதிர்ந்திட்ட இந்த நட்சத்திரத்தை
தேடிடுமோ?
மீண்டும் உன் வானம்...
ஏழு ஜென்மம் என்பது
வெறும் எண்கள்தான்
பெண்ணே!
அறிவியல் தூண்டிலில்
சிக்கிய நிஜ புழு நான்..
இன்றே தான்
நீ வேண்டும்...
எனக்கென பிறந்தவளே..!
அடுத்த பிறவியை
அப்பொழுது வாழ்ந்து பார்ப்போம்
நேர்ந்தால் கணிதத்தில்
சேர்த்து கொண்டு
நீயும் நானும்..?
மீண்டும் மீண்டும்..!

எழுதியவர் : சுரேஷ் குமார் (18-Apr-18, 12:31 am)
பார்வை : 427

மேலே