நண்பரின் வித்தியாசமான பயணம்
நான்கு நண்பர்கள் தன் சுற்றுலா பயணத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். தன் பள்ளிப் பருவத்திலிருந்து தன் கல்லூரி படிப்பிலும் ஒன்றாகவே படித்து முடித்து ஒன்றாகவே தன் பயணத்தை தொடர்ந்தனர்.
ஆனால் வேலை தேடி சென்ற இடங்கள் வெவ்வேறு ஆனாலும் தங்கள் நட்பை தொடர்ந்து கொண்டே உள்ளனர்.வேலை, பணம், குடும்பம், சொந்த ஊர் என இப்படியே அவர்கள் வாழ்க்கை நகர்ந்தது.
இதில் அகிலன்
என்பவன் எதை செய்தாலும் யோசித்து செய்வான்.ராமு என்பவன்
பயந்த சுபாவம் கொண்டவன்.நித்தி என்பவன் முன் கோபம் கொண்டவன்.கதிர் என்பவன் பேராசை கொண்டவன்.அகிலன் எப்பொழுதும் கதிருக்கு அட்வைஸ்
பண்ணியே இருப்பான்.
இவர்கள் ஏற்பாடு செய்த சுற்றுலா பயணம் அழகிய நீர் வீழ்ச்சி நிறைந்த பகுதி, அடர்ந்த மரங்கள் நிறைந்த காட்டு பகுதி, பறவைகள் கூச்சலிட்டு திரிந்து செல்லும் பகுதி, அதன் நடுவே
அமைதியான சூழலில் ஒரு அழகிய
வீடு .அந்த வீடு அகிலனின் அலுவலக நண்பர் ஒருவரது வீடு
அங்கே தான் செல்கின்றனர்.
நால்வரும் தங்களின் துணிகள், ஐந்து நாட்களுக்கு தேவையான உணவுகள், மற்றும் தண்ணீர், மருந்து பொருட்கள்,நொருக்கு தீணி, கொஞ்சம் பணம் என அனைத்தையுமே எடுத்து கொண்டு கிளம்பினர்.
ஒரு கார் வாடகைக்கு எடுத்து கொண்டு கிளம்பினர்.வழியெல்லாம்
அரட்டை அடித்து கொண்டு,பாட்டு பாடி கொண்டு பயணித்தனர்.
5மணி நேரம் கழித்து அவர் இறங்கும் இடம் நெருங்க நெருங்க அனைவரும் ஆவலோடு எதிர்பார்ப்போடு இருந்தனர்.ஒவ்வொரு வீடும் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது.அவர்கள் தங்கும் வீடும் வந்தது . கார் காரன் அவர்களையும்
அவர்களின் பொருட்கள் அனைத்தையும் இறக்கி விட்டு நீங்கள் கிளம்பும் போது போன் பண்ணுங்க. இங்க தெரிஞ்சவங்க மூலமாக கார் ஏற்பாடு செய்யுறேன் என நம்பர் கொடுத்து பணம் வாங்கிட்டு கிளம்பினான்.
நால்வரும் குளித்து தங்கள் உணவுகளை சாப்பிட்டு ஊரை சுற்ற
கிளம்பினர்.மீன் பிடிக்க தூண்டில், குளிக்க மாற்று துணிகள் தண்ணீர் என வேண்டியதை எடுத்து கொண்டு நதிகள் எங்கே என் விசாரித்து கொண்டே சென்றனர்.
சில்லென்ற காற்று அழகிய ஓடை
அதில் படகுகள் என மிகவும் அருமையாக இருந்தது.நிறைய சுற்றுலா பயணிகளும் இருந்தனர்.
நால்வரும் படகில் ஏறி நதியில் பயணித்து வெகு தொலைவில் சென்றனர்.பொழுது சார்ந்த நேரம் அது படகு ஓட்டுபவர் தீடீரென மயங்கி விழுந்து விட்டார்.அகிலன் உடனே அவருக்கு முதலுதவி செய்ய ராமுவின் சொன்னான்.பின் துடுப்பை
பிடித்து அகிலனும் நித்தியும் குழந்தை தட்டு தடுமாறி நிற்பதை போல,படகை நிறுத்தினர்.படகு நதியின் ஓடத்தில் நதியின் ஓரத்தில் ஒரு பாறை மீது மோதி படகை நிறுத்தினர்.படகு ஓட்டுபவர் மயங்கிய நிலையிலே இருந்தார்.ராமு பயந்து புலம்ப ஆரம்பித்தான். காப்பாத்துங்க காப்பாத்துங்க கத்தினான். அகிலன் யோசித்து படகை மெதுவாக வந்த வழியே துடுப்பை அசைத்து பார்போம்.முயற்சி செய்து பார்போம்.படகு ஓட்டுபவர் உயிரும் தம்மிடம் தான் உள்ளது.உதவுகள் என
கூறினான். முடியாது படகு கவிழ்ந்து போச்சுன்னா? வழி மாறி போய்டோம்னா? என் நித்தி சொல்ல,
கதிரோ எனக்கு படகு ஓட்ட தெரியாது என பேச தொடங்கினான்.அகிலன் பயப்படாதிங்க முயற்சி பண்ணி தான் பார்போம் என்று நண்பர்களை பேசி சம்பத்திக்க வைத்தான்.
ராமு படகு ஒட்டுபவரை பார்த்து கொண்டும் கதிர்,நித்திரை, அகிலன் மாற்றி மாற்றி துடுப்பை அசைத்து மெது மெதுவாக கரையை அடைந்தனர்.படகு ஓட்டுபவரை மருத்துவமனையில் சரியான நேரத்தில் சேர்த்தனர்.அவரும் நன்றி கூறினார். நால்வரும் வீடு திரும்பினர்.அடுத்த நான்கு நாட்களை
மகிழ்ச்சியாக கழித்து பயணத்தை முடித்து அவர்கள் அவரவர் வீடுகளுக்கு திரும்பினர்.