ஏன் பெத்தீங்க

டேய்...உனக்கென்ன..பைத்தியம் கிய்த்தியம் புடிச்சிடுச்சா என்ன போயும் போயும் பொண்ண புடிச்சி இருக்கான் பாரு அவளும் அவ மொகறக்கட்டையும்
ஏண்டா வேற பொண்ணே கெடைக்கலையா ஒனக்கு சோளக்காட்டு பொம்மையே தேவலாம்
போல இருக்கே அவளோட பேரென்ன "" அம்மாவின் ஆதங்கம்

``` பேரு ஓவியாமா...அம்மா நீங்களு ஒரு பொண்ணு தானே இன்னொரு பொண்ண இப்படி பழிக்கலாமா அம்மா''' மகனின் பரிந்துரை

```ஏண்டா பல்லு பெருத்தவளும் உதடு பெருத்தவளும் தான் ஒனக்கு கெடைச்சாளா பேரு அழகா இருக்கிறது ஆனா பொண்ணு அந்த பேருக்கு எதிர்மாறா இருக்கா''' அக்கா குத்திக்காட்டினாள்

```அம்மா அவ அழகு இல்லன்னா என்ன, அழகுதானா வந்து குடும்பம் நடத்தப்போவுது, அப்படியே அழகியாவே கட்டிக்கிட்டு வந்தாலும் எத்தன நாளுக்கு அது தாக்கு புடிக்கும் என்னமோ சொல்லுவாங்களே பூமிய ஒரு சாலு ஓட்டினாலும் புழுதிதான், ஒரு புள்ள பெத்தாலும் கெழவிதான்னு அப்போ அழகு எங்கே போச்சி நல்ல கணகச்சிதமா தானே வரப்போற அண்ணி இருக்கிறாங்க'''
தங்கையோட பங்கிற்கு ஒரு சின்ன ஆறுதல் மொழி

``` நீங்க எல்லாருமா சேர்ந்து அந்த பொண்ணை பழிக்கலை, அவளை பெத்தவங்களையும் பழிக்கலை , அவளை படைச்ச அந்த ஆண்டவனையே பழிக்கிறீங்க எனக்கு அழகி ஒன்னும் தேவையில்ல நல்ல மனசு உள்ளவ தான் வேணும் அது அவகிட்ட இருக்கு, இதுக்கு மேல யாரும் விளம்பரம் எழுதி ஒட்ட வேண்டாம்''' தீர்க்கமாக மகன் சொல்லிட்டான்

```எல்லோர் வாயும் அடங்கிட்டது''"
""""""
"""ஏங்க...உங்க வீட்டாருக்கு நான் வாழ்க்கைப்பட வருவதில் யாருக்கும் விருப்பம் இல்லை அப்படிப்பட்டவங்க கிட்ட நான் வந்து குப்ப கொட்ட முடியுமான்னு தெரியலை,,, மனமுடைந்து போனாள் ஓவியா

"""என்னது அது எப்படி அதுக்குள்ள ஒனக்கு தெரிய வந்துட்டது, அப்படின்னா எனக்கு எதிரி என் வீட்டிலேயே இருக்கிது தெரிய வந்துடுச்சி ஆனா அது யாருன்னுதான் தெரியலே கண்டு பிடிக்கிறேன்"""

"""நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க"""

"""உண்மையைச் சொல்லவா உண்மையைப் போலவே பொய்ச் சொல்லவா"""

"""இரண்டுல எதை சொன்னாலும் நான் நம்புற மாதிரி இருந்தா சொல்லுங்க"""

""" வீட்டில இருக்கிறவங்களுக்கு மறுமகள் வேணாம் ஒரு வேலக்காரி வேணும், அவுங்களுக்கு தெரிஞ்சிப்போச்சி இப்போ டீச்சர் ட்ரெயினிங்கு படிக்கிறவ படிச்சி முடிச்சி வேலையை தேடிக்கிட்டா நமக்கா ஆக்கி அரிச்சி போடுவாங்கிறது தெரிஞ்சிப்போச்சி அதுக்காக என்னை திசை திருப்ப ஆடுற நாடகம் இது நீ அதையெல்லாம் காதுல போட்டுக்காதே"""

"""அவுங்க நெனைக்கிறதிலேயும் தப்பு இல்லிங்களே"""

"""அப்படின்னா நீ வேற எவளையாச்சும் கட்டிக்கோன்னு சொல்ல தோணுது அப்படித்தானே"""

""அப்படி இல்ல"""

"""பின்னே எப்படி இதோபார் ஓவியா உனக்கு விருப்பம் இல்லேன்னா சொல்லிடு"""

"""கோவத்தப் பாரு""" இதுக்காக என்னை அவளே இவளே அப்பிடி இப்பிடின்னெல்லாம் பேசனுமா நீங்க என்னையோ இல்ல நான் உங்களையோ
பட்டாவா போட்டுக்கிட்டோம்"""

"""என்ன? பேச்சே ஒரு தினுசா வருது"""

"""காலத்தோட கூட நாமதான் ஓடனுமே தவிர நம்ம கூட காலம் கூப்பிடுற எடத்துக்கும் நேரத்துக்கெல்லாம் ஓடிவராதுங்க"""

"""இதோபார் ஓவியா இந்த பொடி வச்சி பேசறது எல்லாம் எனக்கு புடிக்காது எது சொல்ல வந்தாலும் மூஞ்சிக்கு நேரா சொல்லிடு"""

""இது உங்க வீட்ல மட்டும் நடக்கல எங்கவீட்டிலேயும் நடக்குது"""

"""அப்பாடா..ஒரு உண்மை வாயில இருந்து தெறிச்சி விழுந்திருக்கு""""

அம்மா சொல்றாங்க """ஏண்டி ஓவியா எங்கடி கெடைச்சது ஓனக்கு அந்த மஞ்சப்பைன்னாங்க எனக்கு ஒன்னுமே புரியலை இவங்க எதைப்பத்தி சொல்றாங்கன்னு அப்புறந்தான் தெரியவந்தது உங்களப்பத்திதான் சொல்றாங்கன்னு"""

அதை கேட்டதும் எழுந்து நடையை தொடரும் போது தெரிந்தவர் ஒருவர் குறுக்கிட்டு """ என்னப்பா....செட்டிங்கா.. நாங்க சொன்ன பொண்ண பத்தி என்ன முடிவு பண்ணீங்க இப்போ வேற எவ கூடவோ பீச்சில ஜோடியா சுத்துறே"" என்றார்

"""என்னோட புகைபடத்தை அனுப்புறேன் உங்க வீட்ல காட்டுவே அதுக்காக உன்னோட மெயில் ஐடி இருந்தா கொடுன்னு கேட்டேன் நான் smsல அனுப்புறேன்னா"""

"""அப்புறம் அனுப்பினாளா"""

"""அனுப்பினா வந்த மெயில் ஐடி அட்ரஸ் எஸ்எம்எஸ்ல இது நீங்களே படிச்சிப் பாருங்க"""

"""என்னப்பா இது அடிசெருப்பால அட்தி ரேட் ஜிமெயில் டாட்கம் அப்படின்னு எழுதி இருக்கா ச்ச்ச்சா படு கேவலமானவளா இருப்பா போல

( மனசுக்குள்) இந்த அடி செருப்பாலவே போதும் இதுக்கு மேல கேட்டா தொடப்பக்கட்ட மொறம் எல்லாம் வரும் போல இருக்கு....

அவளோட அப்பன் ஏங்கிட்ட ரிக்வஸ்ட் பண்ணினார் நல்ல பையன் இருந்தா சொல்லுங்கன்னார் நான் உன்னை ரெக்கமெண்டு பண்ணேன்

கிழிச்சீங்க..போங்க (மனசுக்குள்)

அவருக்கும் எனக்கும் இருபது வருஷ சிநேகிதம் அவனுக்குப்போயி இந்தமாதிரி புள்ளைங்களா

அதையேன் கேக்குறீங்க விடுங்க பெரியவரே போலீஸ் ஸ்டேஷன் வரை அவ கதை நாறிப்போச்சே உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே அதை கொண்டுவந்து என் தலையில கட்டப்பாத்தீங்க அது தானா கழண்டு போயி கடைசியில வேலிதாண்டிய வெள்ளாடா ஆயிடுச்சி நல்லவேள தப்பிச்சேன்

சரிப்பா அந்தப் பொண்ணு அங்கே தனியா நிக்கிது போ நீ போகிறது சரியான வழிதாம்பா போ""

"""சரிங்க ...அவளை அழைத்துவந்து ஆட்டோவில் உக்காரவச்சிட்டு வீடு சென்றான் ""அவ தான் அப்படின்னா இவளும் சரிபட்டு வரமாட்டா போல தெரியிது இனி ஜாக்கிறதையா இருந்துக்கிறது தான் நல்லது"" என்றெல்லாம் சிந்தித்தபடி வீடு நோக்கி நடந்தான்.

"""இதோட சரி இனி நாமாக எதையும் விரும்புறதா இல்ல நம்மை எது விரும்புதோ அதை பற்றி நல்லா யோசிச்சி எறங்குவோம்""" என்று முடிவு பண்ணிக்கொண்டான்

இன்னொரு நண்பர் குறுக்கிட்டார்
""" என்ன நண்பா எதையோ பறிகொடுத்த மாதிரி எதிரில் வரவங்களை கூட கண்டுக்காம போறீர்""
என தோளை தட்டியபடி கேட்டார்

""அட...நண்பா..நீயா...எங்க இந்தப்பக்கம்
ஆமாம்...கல்யாணம் ஆகி ஒரு வாரம்கூட ஆகல அங்குட்டு தனியா விட்டுவிட்டு நீ இங்கிட்டு தனியா உட்கார்திருக்கிறே """

"""கல்யாணம் ஆகி ஒருவாரமாவுது இன்னும் பலானது நடக்கல அதான் தனியா உட்கார்ந்து பொலம்பிக்கிட்டு இருக்கேன்"""

"""ஏன்?... என்ன ஆச்சி அப்போ இன்னும் முதல் இரவே நடக்கலையா?""""

"""அட.... போப்பா அதையேன் கேக்குறே
ஓங்கிட்ட சொல்றதுக்கென்ன அன்னைக்கு ராத்திரி சொல்றா அட போங்க முதல் இரவாவது மண்ணாங்கட்டியாவது இன்னைக்கு நான் இடம் கொடுத்தா வயித்துல பூச்சோ பொட்டோ உண்டாவும் பெருசாயி அதுக தேவையை பூர்த்தி பண்ண நம்மால முடியலன்னா உங்களால எங்களுக்கு ஒன்னும் செய்ய
முடியாதவங்க யாரை கேட்டு எங்கள பெத்துக்கிட்டீங்க நாங்களா உங்கள பெத்துக்கச்சொன்னோம் என்னாத்துக்கு பெத்தீங்க இந்மாதிரி கைக்கு எட்டினா வாய்க்கு எட்டாதவும் வாய்க்கு எட்டினா வயித்துக்கு எட்டாதவும் இவ்வளவு ஏன் ஒரு நாகரீகமா போட்டு அழகு பாக்க நல்ல துணிமணி உண்டா ஒரு நகநட்டு உண்டா தங்கத்தில வைரத்திலே இல்லன்னாலும் ஒரு ரோல்டு கோல்டுலேயாச்சும் உண்டா எஞ்சோட்டு புள்ளைங்க எல்லாம் எங்கள சொறி நாயை பாக்கிற மாதிரி பாக்குறாங்க அப்பவே உசுர விட்டுடனும் மாதிரி தோனும் சாதி மதத்திலத்தான் பிரிவினை இருக்குன்னா மாணவர்களில் கூடவா இந்த பிரிவிணை ஒரு வண்டி உண்டா போவ வரன்னு கொஞ்ங்கூட கூச்ச நாச்சம் இல்லாம பகிரங்கமா கேட்டா இதயம் டாரு டாரா கிழியிற மாதிரி தோனும் அதுகளுக்கு என்ன பதில் சொல்றது இருக்கிற நெலவரத்தில பதில் சொல்லி முக்கங்குலைய என்னால முடியாதுப்பான்னு கிட்ட நெருங்கவே விடமாட்டேங்கிறா என் படுக்கையே வெறாண்டாவுலதான் அவ ரூமுக்குள்ள போயி கதவ சாத்திக்குவா
அப்புறம் எப்படி நண்பா அதெல்லம் நடக்கும்"""

"""எனக்கென்னமோ அவுங்க அப்படி சொல்றதலேயும் ஒரு ஞாயம் இருக்கிறதாத்தான் செய்யிற மாதிரி தோனுது ஆனாலும் அதைகட்டுப்படுத்த ஆயிரம் வழிகள் இருக்கையிலே சுத்தமா நெருங்கவே விடாத போது அநியாயமா தோனுது ஆமாம்...இந்த விஷயத்தை முன்கூட்டியே இது பத்தி உன் காதுல போடலையா"""

"""போட்டு இருந்தா எனக்கென்ன தலைகிருக்கா இந்தமாதிரி எழவை தலையில கட்டக்கிட்டு குடும்பம் நடத்த"""

"""அப்போ கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியா நடமாடிக்கிட்டு இருக்கேன்னு"""

"""ஆமாம் நண்பா ஏதாவது ஒரு வழியை சொல்லு"""

"""அப்பா சாமி ஆளவிடு என்வழி இதோ இருக்கு உன்வழிய நீதான் கண்டுபிடிக்கணும் .....ஹா.....எனக்கு ஒரு சந்தேகம் உன் மனைவி அவுங்க அப்பா அம்மாவை ஏன்? பெத்தீங்கன்னு டார்ச்சர் பண்ணியிருக்கனும் தனக்கு அந்த நிலமை வந்துடுமோ என்கிற பயம் தான் அது இதனால தன் வாழ்க்கைக்கே கழுத்தை இறுக்குகிற கயிறுன்னு புரியல நண்பா நீ ஒன்னு பண்ணு உன் மனைவியை அவுங்க வீட்டுக்கு அனுப்பி வச்சிடு அப்போ ஒன்னுமட்டும் சொல்லு உனக்கு புள்ளகுட்டி பெத்துக்கிற எண்ணம் வந்தா புருஷன தேடி வா அதுவரை நீ உன் தாய் வீட்டிலேயே இரு இங்க என்னை இருபத்து அஞ்சி வருஷம் பாத்த்தவங்க இப்பவும் பாத்துக்குவாங்க இப்போ நீ இங்கே இருக்க அவசியம் இல்லன்னு சொல்லிப்பாரு நான் வரேன்""" புறப்பட்டுவிட்டான்

கொஞ்சம் இரு நண்பா அதுக்கு எதுக்கு தாலிகட்டினீங்கன்னு கேட்டா

நான் பொண்ணு பாக்க வந்தப்பவே சொல்லி இருக்கனும் கல்யாணம் பண்ணிக்கனுமுன்னா புள்ளகுட்டி யெல்லாய் பெத்துக்கு முடியாதுன்னு
நான் வேற எவளையாவது கட்டிக்கிட்டு சந்தோஷமா இருந்து இருப்பேன்னு சொல்லு

வெரிகுட் ஐடியா நண்பா தேங்க் யூ சோமச் இரண்டுல ஒன்னு பாத்துடுறேன்
அவளா நானான்னு ஓகே நண்பா இப்போ நான் தெளிஞ்சிட்டேன் இப்போ நீ போகலாம் நண்பா

ம்ம்ம்....யாரு யாருக்கோ வழிகாட்ட நானிருக்கிறேன் எனக்கு வழிகாட்ட யாருமில்லையே என்னமோ சொல்லுவாங்களே ம்...மரம் வச்சவன் தண்ணி ஊத்துவான்னு அவன் தண்ணி ஊத்துரதுக்கு முன்ன ஏங்கண்ணுல தண்ணி ஊத்தாம இருந்தா சர்தான் வீட்டை சேர்ந்தான்

"""தம்பி உன்னோட கிளியோபாட்ரா போன்ல உன்னை கூப்பிடுறாப்பா"""" அக்கா அழைத்தாள்

"""அக்கா நான் வீட்ல இல்லன்னு சொல்லிடுக்கா"""

"""என்னடா என்னாச்சி"""

"""இல்லக்கா உங்களுக்கு யாருக்குமே அவள புடிக்கல மீறி கொண்டுவந்தா வீட்ல வீணான பிரச்சனையெல்லாம்
உருவாகும் யோசிச்சிப் பார்த்தேன் உங்க எல்லாருடை மனசு கோண அது கோணலாவே போயிட்டா நானும் உங்களுக்கு ஆகாதவனா ஆகிவிடலாம் அதிலே எனக்கு உடன்பாடு இல்ல இருபத்தஞ்சி வருஷம் வரை என்னை கட்டிக்காத்தவங்களை விட இனி வரப்போறவ எனக்கு பெருசா தெரியலக்கா அதனால அவாய்டு பண்றேன் போய் சொல்லிடுக்கா"""

அதைக்கேட்டு அக்கா உருகிப்போனாள் அம்மாவின் காதில் தம்பியின் மனமாற்றத்தை போட்டாள்

அதைக்கேட்ட அம்மாவும் வருந்தி """ஏம்பா என்னாச்சி ஏன் அந்த பொண்ணு போனை அவாய்டு பண்ணே"""சாந்தமாக கேட்க

""இல்லம்மா அவ சரிபட்டு வரமாட்டா போல தெரிஞ்சது இனி நீங்க காட்டுறவளையே கட்டிக்கிறேம்மா என்றான்""""

"""இல்லப்பா...ஒனக்கு அவதான் சரியா வருவா....நாங்க யாரும் அவள மனசார வெறுக்கலப்பா....எல்லாருமா...சேர்ந்து உன்னை வெருப்பேத்தினோம் அவ்வளவுதான்""""

"""இந்த உங்க வெருப்பேத்தல் அவளை ஆழமா பாதிச்சி இருக்கு ரொம்ப துயரமா சொன்னாம்மா அதுமட்டுமில்ல உங்க மனசில ஒன்னும் வைக்காம பேசிட்டீங்க ஆனா அவுங்க வீட்ல நெஜமாவே என்னை வெருக்குறாங்க எங்கிறத அவ பேசும் பேச்சில இருந்து தெரிஞ்சிக்கிட்டேன் அதனால அவ வேணாங்கிறேன்"""

ஓவியா...உள்ளே நுழைந்து """நீங்க பேசிக்கிட்டதையெல்லாம் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன் ....என்ன சார் வீட்டுக்குள்ள இருந்துக்கிட்டே அவுங்க அக்கா கிட்ட நான் வீட்ல இல்லன்னு சொல்ல சொன்னவரை எங்கே கொஞ்சம் கூப்பிடுறீங்களா"""

"""தம்பி...இங்கவா..யாரு..வந்திருக்கான்னு பாரு""" அக்கா தம்பிக்கு குரல் கொடுத்தாள்

தப்பி.. வந்தான்

"""என்ன கோவக்கார சார் நீங்க வீட்டில இல்லன்னு சொல்லச்சொன்னா நாங்க விட்டுடுவோமா வீடு கொழந்த குட்டிங்க இல்லாம வெறிச்சோடி கெடக்குது உடனே கல்யாணத்தப்பண்ணி ரவுண்டு கட்டி அடிச்சி அந்த வெறிச்சோடி கெடக்கிற எடத்த நெறப்பனும்"""

எல்லோரும் சிரித்துவிட்டார்கள்

"""ஏம்மா உங்க அப்பாவுக்கு இதுல விருப்பம் இல்லன்னு தம்பி சொன்னான்
அதனால பெத்தவங்க மனசு எப்படியெல்லாம் வளத்து கட்டிகொடுத்து அழகுபாக்க நெனைச்சிருப்பாங்க இந்த காதலு கீதலுன்னு அவுங்க மனச கிழிச்சி பொட்டுவிடுதுன்னு ரொம்ப வருந்தினாம்மா"""

"""வருந்தவெல்லாம் தெரியுமா சாருக்கு ஆமா அத்த அது வேற ஒன்னுமில்ல எங்க அப்பாவோட பாலிய சினேகிதர் போல இருக்கு அவரு பையனுக்கு கேட்டு இருந்தாராம் அதனால எதையாவது சொல்லி என் மனசை கலைச்சா சம்மதிப்பான்னு அப்படி பேசிட்டதா சொன்னார் இப்போ அவுங்க பையனுக்கு அவுங்க சொந்த தங்கச்சி மகளையே பேசி முடிச்சிட்டு அப்பாவுக்கும் தெரியவச்சிருக்காரு அதனால அப்பா என்னை பக்கத்தில கூப்பிட்டு வருந்தாதம்மா உன்னோட காதல் ரொம்ப பவர்புள் காதலுன்னு நெனைக்கிறேன் அதை நிராகரிக்க அந்த கடவுளுக்கே விருப்பம் இல்லையின்னு நெனைக்கிறேன் சரி பையன் நெலவரத்த தெரிஞ்சிக்கிட்டா என் கடமை முடியுமுன்னு நெனைக்கிறேன்னார் உடனே ஓடி வந்துட்டேன்"""

"""பையன் பக்கம் டபுள் ஓக்கேமா அப்புறம் வீட்டை புள்ளகுட்டியா பெத்து ரொப்புங்கம்மா""அம்மா

பலானது நடக்காம மனசு ஒடைஞ்ச நண்பர் மூட்டை முடிச்சியோட வந்தார்
நண்பா...இனிப்பு பண்டம் அந்த கடையில இருந்தது எத்தனையோ அத்தனையிலும் ஒவ்வோர் கிலோ உன் வாயில போட வாங்கி வந்திருக்கேன் நண்பா

என்ன நண்பா பத்துநாள் பட்டிணியா கெடந்தவங்க மாதிரி கண்ணு மூஞ்செல்லாம் டொக்கு விழுந்து வயசான மாதிரி தெரியிறே

நண்பா இந்தா இந்த பையை அம்மாகிட்ட கொடுத்து எல்லாருக்கும் கொடுக்கச்சொல்லு நீ அப்படிக்கா வா தனியா பேசுவோம்.....நண்பா நீ சொன்னமாதிரியே சொன்னேம்பா சொல்லி முடிக்கிறதுக்குள்ளவே சரண்டர் ஆயிட்டா நண்பா ரொம்ப நன்றிப்பா

ஓஓஓஓஓ....இதத்தான்...காஞ்சமாடு
கம்புல விழுந்த மாதிரிங்கிறதா
••••••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (19-Apr-18, 9:55 am)
பார்வை : 376

மேலே