மறுபடியும்

விஜய் ஒரு பொறியியல் பட்டதாரி பார்க்க அழகாக இருப்பான் அறிவிலும் சிறந்தவன்.
ஒரேபிள்ளை வசதியான குடும்பம் நல்ல பழக்கவழக்கங்களுக்கு சொந்தக்காரன் எவ்வளவோ சொல்லிபார்த்தார்கள் கேட்காமல் தன் சொந்த ஊரை விட்டு வேலைதேடி பெங்களூருக்கு வந்தான்.
தன்னுடன் படித்த நண்பன் குமாரின் உதவியோடு ஒரு பன்னாட்டு நிறுவனத்திலே மேளாலராக பணியில் சேர்ந்தான் நல்ல சம்பளம் தன் நண்பன் குமாரின் விட்டிலேயே
தங்கிக்கொண்டான்.குமாரும் இதேபோல் சொந்த ஊரைவிட்டு வேலைக்கென்றே பெங்களுருக்கு வந்து சேர்ந்திருந்தான்..
இரவில் மட்டும் வீட்டில் சமைத்துக்கொள்வார்கள் காலையிலும் மதியமும் வெளியிலேயே
சாப்பிட்டுக்கொள்வார்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை வெளியில் போய்
ஊரை சுற்றிப்பார்க்காமல் சினிமா கேளிக்கை என சந்தோஷமாக இருக்காமல் வீட்டிலேயே அடைந்துக்கிடந்தான் விஜய்.
நாட்கள் நகர்ந்தது...
காலை பத்து மணி விஜய் தன் அலுவலகத்தில் மடிகணினியில் ஆழமாக தன் சிந்தனையை செலுத்தி மாதாந்திர கணக்குகளை ஆய்வு செய்துக்கொண்டிருந்தபோது ஒரு போன்கால் வந்ததையடுத்து தன் சிந்தனையை லேப்டாப்பிலிருந்து
தளர்த்தி போனை எடுத்து ஹலோ என்றான் மறுமுனையில் ஒரு பெண்குரல் தன்னை உமா என்று அறிமுகம் படுத்திகொண்டு நான் அன்னை இல்லம் என்ற அனாதை இல்லத்திலிருந்து பேசுகிறேன் ஒரு பெண்குழந்தையின் கல்வி செலவை இவ்வாண்டு நன்கொடையாக ஏற்று
வழங்கமுடியுமா தயவு செய்து உதவினால் ஒரு பெண்குழந்தையின் வாழ்க்கையில்
கல்விகண்ணை திறந்துவைத்த புண்ணியம் உங்களை சேரும் நிதி உதவி செய்யுங்கள் என்று அந்த இனிமையான குரல் விஜய்யிடம் மன்றாடியது.
தான் ஒரு முக்கியமான வேலையில் உள்ளதால் பிறகு போன்செய்கிறேன்
என்று போனை வைத்து தன் லேப்டாப்பில் கவனத்தை செலுத்தினான்.
மதிய உணவுவேளை விஜய் தன்சக நண்பர்களுடன் பேசிகொண்டே கேன்டீனை நோக்கி நடந்தான். சாப்பிடும் போது அவனுக்கு அன்னை இல்லம் உமாவின் போன்கால் நினைவுக்கு வந்தது சாப்பிட்டு முடிந்ததும் வெளியேவந்து ஒரு சின்ன நடைப்பயிற்ச்சி செய்துக்கொண்டே அன்னையில்லம் உமாவிற்கு போன் செய்து விவரங்களை அறிந்துக்கொண்டு
ஒரு மாணவிக்கு ஒருவருட கல்விச்செலவை ஏற்றுக்கொள்வதாக சொல்லி அதற்கான காசோலையை தன் அலுவலகத்தில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு உமாவிடம்
தன்னுடைய அலுவலக விலாசத்தை சொல்லிவிட்டு தன் கேபின் நோக்கி நடந்தான்.
மாலை நான்கு மணி தேநீர் இடைவேளை அலுவலக உதவியாளர் ரமேஷ் வந்து விஜய்யிடம் சார் உங்களை பார்க்க யாரோ ஒரு பெண்மணி வந்திருப்பதாக சொன்னான்.
சற்றே யோசித்த விஜய் அவர்களை பார்வையாளர்கள் அறையில் காத்திருக்கும்படி சொன்னான்.
அழகான ஒல்லியான உடல்வாகு பார்ப்பவரை சுண்டி இழுக்கும் கண்கள் உடையில் தனி அக்கறை காட்டியிருந்தாள் மூன்றாம் பிறை நிலவு போன்று அழகாக சின்ன பொட்டு அவளின் நெற்றியை அலங்கரித்தது அன்றைய தினசரியில் முழ்கியிருந்தாள் உமா.
விஜய்யின் வருகையை அறிந்து
தினசரியில் இருந்து தன்னை விடுவித்து விஜய்யை பார்த்து ஐம் உமா ஃபிரம் அன்னையில்லம் என்றாள். உமாவை பார்த்ததும் ஒரு நிமிடம் விஜய்யின் இதயம் நின்று துடித்தது. விமான விபத்தில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட அதே நிர்மலா உமாவின் உருவத்திலே.
அவனால் நம்பமுடியவில்லை அதிர்ச்சியிலிருந்து மீண்டு ஹலோ என்றான்.
விமான விபத்தில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட அதே நிர்மலா தான்
உமாவின் பெயரில் அவன் கண்முன்னே நிற்பது என்பது
உமாவுக்கும் தெரியாது. அந்த விமான விபத்தில் நிர்மலா தன் பழைய நினைவுகளை இழந்திருந்தாள்.விஜய் தன்னை உயிருக்கு உயிராய் காதலித்தவன் என்ற ஒரு சின்ன நினைவு கூட அவளுக்கு வரவில்லை...
அவளின் வலது புருவத்திலே சின்ன தழும்பு ஒன்று அவள் நிர்மலா தான் என்பதை உறுதி செய்தது.
விஜய்யின் உள்ளத்தில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்க ஆரம்பித்தன அவன் மீண்டும் பிறந்து வந்ததை போல் உணர்ந்தான்.
இதை எதையும் அறியாத உமா விஜய்யிடம் காசோலை பெற்றுக்கொண்டு அவனுக்கு நன்றி
சொல்லி அங்கிருந்து புறப்பட்டுச்சென்றாள்.
விஜய் அவளை காதலிக்க தொடங்கினான் காதலித்தவளையே
மறுபடியும் காதலிக்கும் புதிய அனுபவம் விஜய்க்கு. உயிருக்கு உயிராக காதலிக்கதொடங்கினான்
விஜய் உமாவான நிர்மலாவை...