போனால் போகட்டும் போடா

இந்த கதை யார் மனதும் புண் படும் நோக்கில் எழுதவில்லை மற்றும் காதாபாத்திரங்கள் உறவுகள் அனைத்தும் கற்பனையாகவே சித்தரிக்க பட்டுள்ளது
இந்த உலகத்தில் எதையுமே நம்மால் நிரந்தரப்படுத்த முடியாது ஏனென்றால் இந்த உலகத்தில் நாமே நிரந்தரமற்றோர் !!!
ஆம் ,,,,,,
அன்பை தேடிப்பார்த்தால் அதற்கும் இங்கே ஓர் விலை நிர்ணயிக்கப் பட்டுள்ளதால்
போனால் போகட்டும் போடா என்று விட்டு விட்டேன் .
என் அன்னையின் வயிற்றில் கருஉற்ற போதே கடவுளிடம் சண்டையிட்டு
வர்ண பகவானும் வழிவிடாமல் தடுக்க
வண்டிக்கட்டி அழைத்து செல்ல இயலாத காலத்தில் ஒரு இல்லத்தின் திண்ணையிலே
அந்த அழகிய கிராமத்தில் இயற்கையையும் எதிர்த்து பிறந்தவன் நான்
என் மழலைப் பருவமது கடந்தது சில நாட்களுடன் பயணித்த படியே
பசுமையான கிராமமது விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் இல்லம்மது
அதிகாலையில் அழகிய பனி பொழிய
மாட்டு சாணம் வாசம் வீச
மங்கையர்கள் அழகழகான கோலமிடுவர்
அங்கே போட்டியும் பொறாமையும் குறுக்கிடவில்லை
மாறாக வேடிக்கையும் உதவுதலும் வீட்டுக் கொடுத்தாலும் புன்னகையுடன் பெரும் விமர்சியாக தொடங்கிய மார்கழி திருவிழா . ( தொடரும் ,,,,,_______
படைப்பு
ரவி.சு