ஒரு பக்க கதைகள் 7

விடியல் முன்னே சமைத்து அதை தனக்கும் எடுத்து கொண்டு, தன் குழந்தைகளுக்கும் எடுத்து வைத்து, விட்டு தன் கணவனிடம் சொல்லி விட்டு, வேக வேகமாக ஊர் பேருந்தை பிடிக்க ஓடுக்கிறாள் நதியா.
காதல் திருமணம் செய்து தன் குடும்பத்தை விட்டு பிரிந்து தன் கணவன், தன் பிள்ளைகள் என் வாழ்பவள் நதியா. அவள் கணவனோ படிக்காதவர் கூலி வேலை செய்து வருகிறார்.இரண்டு
குழந்தைகள் ஒரு பெண் குழந்தை அவள் மூத்தவள் பெயர் லட்சுமி.மகன் பெயர் மோகன்.நதியா
பத்தாம் வகுப்பு வரை படித்தவள் பக்கத்து ஊரில் டீச்சர் ஆக பணி புரிக்கிறாள். இப்படி இருவர் சம்பாதிக்க குடும்பத்தில் குறை எதுவும் இல்லாமல் மகிழ்ச்சியோடு வாழ்கின்றனர்.
லட்சுமி அருமையாக பணிப்பாளர்.பேச்சு போட்டி, கவிதை போட்டி கலந்து கொண்டு பரிசும் வாங்குவாள் தமிழ் பற்று நிறைந்தவள்.மோகனுக்கு படிப்பே வராது ஆனால் விளையாட்டு போட்டிகளில் இவனை தவிர வேறு யாரும் வெல்ல முடியாது.
தேர்வும் வந்தது லட்சுமி பள்ளியில் முதல் மாணவியாக வந்தாள்.மோகனோ தேர்வில் தோல்வியே கண்டான்.
அப்பா படிப்பறிவு இல்லை என்பதால் தன் மகனை படிக்க வைத்து தன்னை கஷ்டங்கள் படாமல் நல்ல வேலை செய்து வாழ வேண்டும் என நினைப்பார்.தன் மகளோ அடுத்த வீட்டிற்கு போகும் பெண் தானே ஓரளவு படித்து தன் குடும்பத்தை காக்கும் திறன் இருந்தால் போதும் என நினைப்பார்.
தேர்வில் தோற்றத்தை கண்டு மிகவும் கோபத்தில் மனமுடைந்து நீயும் என்னை போலவே கூலி வேலை செய்து வாழ போரையா என தன் மகனை அடித்து திட்டி தீர்த்தார் அப்பா.லட்சுமியை பாராட்ட கூட மனம் இல்லை.நதியாவோ அவனை விடுங்க.. அவன் படிப்பான்.
அப்பா பேசியதே மனசுலே ஓடி கொண்டு இருக்க நமக்கு படிப்பு ஏன் வரமாட்டுது.ஏன் இப்படி இருக்குறோம்?என்னால தான் அப்பாக்கு அசிங்கம்.நான் என்ன பண்றது.நம்ப இனி இந்த உலகத்தில் வாழ தகுதியற்றவன். என் தற்கொலை செய்து கொள்ள முயற்சிதான்.அவன் அக்கா அவனுக்கு அட்வைஸ் பண்ணதோட
அவன் என்ன பண்றான்.எங்க போறான் வரான் என கவனச்சுனே வந்தாள்.தீடீர் மோகன் எலி மருந்த எடுத்து சாப்பிட்டான்.
லட்சுமி புத்திசாலி உப்பு தண்ணீரை கரைச்சு வாய்யில ஊதி முதலுதவி செய்தால், பின் மருத்துவமனையில் சேர்த்து காப்பாத்தினாள்.
அப்பா, அம்மாக்கு தகவல் சொல்ல விரைந்து வந்தனர்.
ஏன் டா இப்படி பண்ண? என் அழுது கொண்டே கேட்டாள் நதியா.அப்பாவும் அழுது கதறி கொண்டே நான் திட்ட கூட உரிமை இல்லையா? எனக்கு என்றார்.
தற்கொலை செய்து கொள்ள தெரியும், முயற்சி இருக்குற உனக்கு
ஏன் டா? வாழனும் நினைக்க முடியல.
வாழ்க்கையில் தோல்வி இல்லாத விஷயமே இல்லை.பெற்றோர்கள், ஆசிரியர்கள் கண்டிக்காத படிப்பே இல்லை.முடியும் என நினைத்து முன்னேறு என் கூறினாள்நதியா.வீட்டிற்கு அழைத்து வந்தனர்.அம்மா, அப்பா கூறிய அறிவுரையை ஏற்று லட்சுமி உதவியோடு படித்தான்.இடை மாத தேர்வில் வெற்றி பெற்றான்.
மேலும் மேலும் அடுத்த படிப்பிலும் விளையாட்டிலும் ஆர்வம் காட்டி வெற்றி பெற்றான்.அப்பாவுக்கு மிகவும் மகிழ்ச்சி.அப்பாவும் தன் தொழிலை முன்னேற்ற சொந்தமாக பெட்டி கடையை வைத்தார்.தன் குடும்பத்தை நினைத்து பெருமைப் பட்டாள் நதியா.

எழுதியவர் : உமா மணி படைப்பு (21-Apr-18, 9:03 am)
சேர்த்தது : உமா
பார்வை : 215

மேலே