கனவு

என்னவளுக்குத் திருமணம்
நிச்சயம் செய்யப்பட்டது.!
என்னவளாளும் என்னை
மறக்க முடியவில்லை.!
வந்துவிட்டாள் - என்னோடு
வாழ வேண்டுமென்று.!
இனிதே நடக்க இருந்தது
எங்கள் இருவரின் திருமணம்.!
மணமாலைகள் சூடி
அவள் கழுத்தில் - நான்
மங்கள நாண் கட்டும் சமயம்
ஒரு விநாடி கண் மூடினேன்..!
யாரோ அழைக்கும் சத்தம் - என்
காதில் கேட்டது..!
கண்விழித்தேன் - என்
கனவு கலைந்தது..!
ஞாபகம் வந்தது - கனவிலும்
நாம் சேர முடியாதென்று
அன்றே அவள் சொன்னது..!

எழுதியவர் : சத்தியமூர்த்தி (20-Apr-18, 6:23 pm)
சேர்த்தது : சத்தியமூர்த்தி
Tanglish : kanavu
பார்வை : 257

மேலே