சாரலாய் வருவாயா

==================
சாரலாய் வருவாயா.
=================

என் கண்களில் உறங்கும் //
என் கண்மணியே//
என்னில் lபுன்னகை தீண்டி நீ போகையிலே//
மெல்ல மெல்ல ஆசைகள் பூத்து//
மனமெல்லாம் பூவாய் நிறைந்து//
உன் சாரலில் தேடல் கொள்கிறதே //
என்னை மீட்க சாரலாக வருவாயா//


உன்னிலே என்னை வைத்தே
கரைந்தே போகிறேன் //
என் கனவு பூ மகளே//

பனி சாரலாய் சிணுங்க வைப்பாயோ //
மழை சாரலாய் நடுங்க வைப்பாயோ //
உன் சாரலாலே என்னில் வாசம் வீச வைப்பாயோ //

உன்னாலே என் வாழ்வும் தித்திக்குமோ என
ஏக்கம் கொள்ள வைத்து//
என் பொழுதுகளையும் களவாடி கொண்ட என்-தேவதையே//

முதல் தென்றல் சாரலாய் //
அனு தினமும் காலையில் வந்து
என்னை தாலாட்டி போவாயா //

எழுதியவர் : காலையடி அகிலன் (21-Apr-18, 12:46 am)
சேர்த்தது : இஅகிலன்
பார்வை : 238
மேலே