என்னவனுக்கு ஓர் வேண்டுகோள்

உனக்கு நான்
பத்தோடு பதினொன்று.
ஆம்...
நான் உனக்கு
பத்தோடு பதினொன்று தான்!
என்று தெரிந்திருந்தும் கூட
உன்னை மறப்பதற்கு
வழி தெரியாமல்
நினைக்கிறேன்.
மறக்க நினைக்கும் போது
என்னை அழைக்கிறாய்.
அழைப்பை மறுத்தால்....
அன்பைப் பகிர்ந்து என்னைத்
தேங்க வைக்கிறாய்.
உணர்வுகளுக்கு உயிர் அளிப்பது
இரவு மட்டுமே...
இரவின் துணையோடு
எனது உணர்வுகளுக்கு
உயிர் அளித்தாயடா...
நன்றியை மட்டுமே உரித்தாக்குகிறேன்
உன் கரத்தைக்
காதலின் துணையோடு
பிடிக்க முயன்றேன்.
முடியவில்லை....
காதல் அறியாததைக்
காமம் அறிந்தது...
புரிதல்கள் தவறானது தான்.
வேறு வழியில்லை..
உன்னோடிருக்க!!!
காதலைச் சுமக்கும்
நினைவுகளுடன் நான்,
உன்னிடம் கேட்கும்
வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான்.
தயவுசெய்து,
இன்னொரு பெண்ணைக்
காதலித்து விடாதே...
கல்யாணம் மட்டும் செய்துகொள்.

எழுதியவர் : தமிழி (22-Apr-18, 11:29 pm)
சேர்த்தது : தமிழி
பார்வை : 408

மேலே