காதலியே உன்னால்தானடியே

சூறாவளியில் சிக்கி தவிக்கும் படகாய்
என் உள்ளம் உன் பார்வையில் சிக்கி தவிக்குதடி

உச்சிவெய்யிலில் படர்ந்த மர
நிழலாய் என் ஆசை உன் வெட்கத்தில் படர்ந்து விரியுதடி

கருமேக நெரிசலில் கொட்டும் தீர்க்கும் 
மழையாய் என் கவிதை உன் அழகில் கொட்டித்தீர்க்குதடி 

வசந்தகால வானவில் 
பூக்களாய்   என் கனவு உன் புன்னகையில் மலர்ந்தபடி நெடும்பொழுது  நீளுதடி

நீரின்றி துடிதுடிக்கும்
மின்களாய் என் இதயம் உன் உருவம் கானா காட்சியில் துடிதுடிக்குதடி

என்னுயிர் காதலியே   இவையெல்லாம் உன்னால் தானடியே 

எழுதியவர் : சூரியன்வேதா (24-Apr-18, 1:13 am)
பார்வை : 309

மேலே