உனக்குத் தடையேதும் இல்லை
வில்லெனும் விழிகளால்
பார்வை அம்புகளை
பூவுலகின் அழகி நீ
தொடுத்தால்
வீழத்தானே வேண்டும்!
உனக்குத் தடைபோட
யாராலும் முடியாது
கனவுகளில்
வந்தென்னை
மகிழ்ச்சியில் ஆழ்த்த!
நீ நிராகரிக்க கூடாது
என்பதற்காகத்தான்
நான் கடிதங்களை
எழுதுவதில்லை மாறாக
கவிதைகளை எழுதுகிறேன்!
காற்று செய்வதை பார்த்தாயா!
உன் கூந்தலை கலைப்பதும் நீ
சரி செய்தபின் மீண்டும்
கலைத்து விளையாடுகிறது!
விளையாட வேண்டிய நானோ
வேடிக்கைப் பார்த்துக்
கொண்டிருக்கிறேன்!
எதிர்பாராத நேரத்தில்
பக்கத்தில் வந்து நின்றாய்!
படபடப்பும் பரிதவிப்பும்
தொத்திக்கொண்டது என்னை!
உன்பக்கம் திரும்பாது
எதையோ பார்த்தவாறு நிற்கிறேன் என்
கூச்சங்களெல்லாம்
வேர்வைகளாய் தோலின்
மயிரிழைகளில்!