நான் உணர்ந்த காதல்
![](https://eluthu.com/images/loading.gif)
கண்கள் அவனைக் கண்டன
கண்களை மூடினேன்
கைகள் அவனைக் காட்டின
கைகளை அடக்கினேன்
கால்கள் அவனை நோக்கி சென்றன
பாதையை மாற்றினேன்
கனவுகள் அவனைத் தேடி அலைந்தன
தூக்கத்தை விட்டு எழுந்தேன்
இதயத்துடிப்பிலும் அவன் பெயரே ஒலித்தது
என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை
இதயத்துடிப்பை மட்டும் அல்ல
அவன்மீது எனக்கு இருக்கும் காதலையும்தான்