விடியும் வரை காத்திரு
தோல்விகள் நிலையல்ல மனமே!
வேள்வி மலர்கள்
நம்பிக்கை சூல் கொண்டு
காற்றில் வசந்தத்தை பரப்பும்...
சில காத சாக்கடை நடைக்காக
மூக்கினை அறுத்துக்கொள்ளாதே...
கிழக்கு என்பது
தொலைவுகளால் அளக்கபடுவதல்ல
கண்கள் எட்டும் தூரமே
உறங்கி விடாதே..!
விடியும் வரை காத்திரு...
வேட்டை நாள்
வந்தே தீரும்...
தீரவில்லையெனில்
இருள் சுருள்களை
எரித்து காய்வோம்...