மறதிநோயாம்
என் ஞாபக
அடுக்கில்
அடுக்கிய
கோப்புகள்
கலவாடப்
பட்டுவிட்டதோ?
யோசித்துப்
பார்கின்றேன்
யாரால் இது?
போகட்டும்
கவலையில்லை
வாங்கிய
கடன்
கொடுத்த
கடன்
ஏமாற்றிய
காதல்
துன்பந்தரும்
பசி
பட்டியல்
துடைக்கப்பட்டதோ
யார் வேலை
இது?
போகட்டும்
கவலையில்லை
கண் மூடினால்
இப்படியொரு
சுகமெனில்
கடவுள் ஏன்
விழிப்பை
கொடுத்தான்?
கேள்வி
வருகின்றதே
எப்படி இது?
கண்திறக்க
நினைக்க
காணாமல்
போனது
கேள்வி
போகட்டும்
கவலையில்லை
எங்கிருக்கின்றேன்
நான்?
மனநல
மருத்துவமனை
மறதிநோயாம்
எனக்கு
நன்றி
கடவுளே
இல்லை
இல்லை
நன்றி
மருத்துவமே
நா.சே..,