தூரத்து உறவே
![](https://eluthu.com/images/loading.gif)
கைகள் இல்லாமலே என்
இதயம் களவாடுகிறாய்..!
தாலாட்டு பாடாமலே என்
தூக்கத்தைத் தூளி ஆட்டுகிறாய்..!
நகராமலே என்னுடன்
நகர் வலம் வருகிறாய்...!
தரையிறங்காமலே என்னைத்
தாங்கிக் கொள்கிறாய்...!
நான் என்னதான் பேசினாலும்,
எத்தனை நேரம் பேசினாலும்,
உதடுகள் அசையாமல் பேசினாலும்,
செவிகள் இல்லாமலே
கேட்டுக் கொள்கிறாய்...!
அக்கறையாய், அலுப்பில்லாமல்
கேட்டுக் கொள்கிறாய்..!
அந்த பேரகன்ற வானில்
நிலவுவதால் என்னவோ
நிலவென்று பெயர் கொண்டாய்..!
என்னை நெருங்கியே வாழும்
என் தூரத்து உறவாகிறாய்..!