Nanthini S - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Nanthini S |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 25-Dec-2017 |
பார்த்தவர்கள் | : 361 |
புள்ளி | : 31 |
மை தீர்ந்தப் பேனா
முடக்கிடுமோ அவனை?
வார்த்தைகளின்
வார்ப்புக்குத் தானேக் காகிதம்,
விளை நிலம் நெஞ்சமன்றோ!
மூடிய கானகம்
பயமூட்டுமோ அவனுக்கு?
படைப்பை
வாசிக்கத்தானே மானுடம்,
வாரித்தருபவள் இயற்கையன்றோ!
தனிமை
தளர்த்திடுமோ அவனை?
காப்பியங்களைக்
கொண்டாடத்தானேக் கூட்டம்,
கருவுற்று ஈவது மொழியன்றோ!
இறப்பினில் முடிந்திடும்
பிறப்போ அவன்?
படைத்த தன் பதங்களில்
பல யுகங்கள் தாண்டி வாழும்
கவிஞன்றோ..!
அவன், கவிஞன்றோ!
உணர்வில் வேரூன்றி,
இதயத்தில் அரும்பி,
சிந்தையில் மலராகி,
மணம்பீறி, உடல் சுற்றி ஒளியாகி,
அருகிருப்போரை அலையாகத் தீண்டி,
நெகிழியை மிஞ்சி அழியாது உலவி,
பிரபஞ்சத்தையும் இசையச் செய்து,
உண்மைக் காட்சியாகி, இறுதியில்
உன்னிடமே மீண்டும் வரும்!
எனவே,
எண்ணங்கள்.., ஜாக்கிரதை!
மூடும் விழிகளே, சில நேரம்
கற்பனைக் காட்சிகளின் திரை!
தூரப்போகும் புற ஓசைகளே, சில நேரம்
உள் ஓசையின் பெருக்கி!
ஏக உறவுகளிடையே சிலநொடி
ஏகாந்தமே சுயஅன்பின் அரியணை!
வரையறை மறந்த சிந்தனைகளே, சில நேரம்
தேடல்களின் தீர்வுப் பேழை!
சுவடுகள் தொடாதப் பாதையே, சில நேரம்
உனக்கானப் பூக்கள் பூத்த வீதி!
ஏராளம் புழங்கும் அறிவோடு சில நேரம்
களமிறக்கப்பட்ட கற்பனையே
தாக்குமே இதயத்தை,
கலக்குமே கண்களை,
தாண்டுமே காலங்களை!
ஆம், கற்பனை…!
எல்லையில்லாக் களம்,
தொழுவத்தில் தூங்குமோ,
கட்டுறாக் குதிரை?
கட்டுறாக் கற்பனைக் குதிரை..!
சோதனைகளுக்கு ஏற்றவன்
சாதிக்கக் கூடியவன் தானே..!
தொலைவதற்கு ஏற்றவை
தடம் பதிக்கக் கூடியப் பாதங்கள் தானே..!
பாறையில் விழ ஏற்றவை
போராடி முளைத்துக் காட்டும் விதைகள் தானே..!
சுயம் தீயில் நின்று எரிய ஏற்றது
சுடர் ஒளி தரும் தீபம் தானே..!
அக்னிப் பரீட்சைக்கு ஏற்றவன்
அகிலத்துக்கு தன்னை உணர்த்தக் கூடியவன் தானே..!
அவமானங்களுக்கு ஏற்றவன்
அனைவரின் அண்ணார்ந்தப் பார்வையாகக் கூடியவன் தானே..!
போராட்டங்களுக்கு ஏற்றவன்
போராளி தானே..!
புரிந்து கொண்ட பிரபஞ்சம் நகைக்கிறது
பலரின் புலம்பல்கள் கேட்டு..!
“எனக்கு மட்டும் ஏன் இப்படி? ”
என்ற நம் பலரின் புலம்பல்கள் கேட்டு..!
நீ என்
சூன்யங்களை நிரப்பினாய்.
நான் உன்
உலகத்தை திணறடித்தேன்.
*****
பூக்களை
தேடும் பட்டாம்பூச்சிகள்
இலைகளோடு மட்டும்
பேசுவதும் பாடுவதும் இல்லை
*****
எப்பொழுதும் போல
பேச்சு மூச்சற்ற வானம்
தந்தவண்ணம் இருந்தது.
*****
அக்கனவை வரைவதற்கு
வந்த ஓவியன்
திரும்பவே இல்லை
அக்கனவுக்குள் இருந்து.
******
கிளையதிர படபடத்த கொக்கு
மனமதிர நம்பியது
தானொரு மரமென்று.
தானொரு கொக்கென்று
நினைத்த அம்மரம் போல...
****
அப்பாவுக்கு
கதர் ஜிப்பாவும்
கருப்பு கூலிங் கிளாஸும்
பாட்டா ஷூவும் வாங்க
சேமித்தபடியே இருந்தாள்
அனாதை சிறுமி.
*****
கவிதை கவிதை
என அலறும்போதே
செத்து மூழ்கின சொ
தொண்டையில் ததும்பும் துக்கத்தை
இதழில் புன்னகையாக இழைக்க,
வலது கையில் வாள் சுழன்றாலும்
இடது கையில் இதயங்களை வருட,
போர்க்களம் போகும் பாதையிலும்
பூத்திருக்கும் பூக்களை ரசிக்க,
உச்சாணியில் ஏறிய போதும்
உச்சியில் ஒரு துளியும் ஏறாதிருக்க,
சுற்றி இருள் சூழ்ந்தாலும்
உள் ஒளி அணையாதிருக்க,
உலகில் ஒரு துரும்பும் உடன் வராவிடிலும்
உள் ஒசைக்கு இசைந்து நடக்க,
விடியலுக்கான வெகுமதி வெகுவாயினும்
நீதியின் பாதையில் நடக்க,
நிம்மதி நீங்கலான நெருஞ்சியாய்
நெஞ்சம் நெருடினாலும்
தன் தன்மை மாறாதிருக்க,
துணிவு தா பிரபஞ்சமே, எனக்கு
துணை வா பிரபஞ்சமே...!
சுயத்திற்கான காதல் என்பது......
முகவரி கிடைக்காத காதலுக்கான
மாற்று அல்லவே,
உறவென்று உலகமே கிடைத்தாலும்
உற்சவமாய் ஒவ்வோர் நொடியும்
மறவாது கொண்டாடிடவே உள்ளத்தில்
மறைந்திருக்கும் உறவதுவே..!
அது உனக்காக
உன்னிடம் பூக்கும் நேசமே..!
அதுவே உன்
வாழ்விற்க்கான பேராற்றலே..!