கற்பனை
மூடும் விழிகளே, சில நேரம்
கற்பனைக் காட்சிகளின் திரை!
தூரப்போகும் புற ஓசைகளே, சில நேரம்
உள் ஓசையின் பெருக்கி!
ஏக உறவுகளிடையே சிலநொடி
ஏகாந்தமே சுயஅன்பின் அரியணை!
வரையறை மறந்த சிந்தனைகளே, சில நேரம்
தேடல்களின் தீர்வுப் பேழை!
சுவடுகள் தொடாதப் பாதையே, சில நேரம்
உனக்கானப் பூக்கள் பூத்த வீதி!
ஏராளம் புழங்கும் அறிவோடு சில நேரம்
களமிறக்கப்பட்ட கற்பனையே
தாக்குமே இதயத்தை,
கலக்குமே கண்களை,
தாண்டுமே காலங்களை!
ஆம், கற்பனை…!
எல்லையில்லாக் களம்,
தொழுவத்தில் தூங்குமோ,
கட்டுறாக் குதிரை?
கட்டுறாக் கற்பனைக் குதிரை..!