பூ

பூ...
ஒற்றை எழுத்து கவிதை
இயற்கை எழுதிய கவிதை
மங்கையரின் மனம் கவர்ந்த கவிதை
காதலை முன்மொழிய காளையின்
கையில் இந்த கவிதை...

பூ...
சிரித்துக்கொண்டே இருக்கிறது
இறந்தப்பின்னும் சிரிக்கிறது
சிரியுங்கள் மாந்தர்களே என்று
சிரிக்க மறந்த மானிட ஜென்மத்தை
சிரிக்கச்சொல்கி்றது...

பூ..
காலையில் மலர்ந்து
மாலையில் உதிரும்
சோலையில் பிறந்து
சாலையில் சிதறும்
மனிதன் பிறந்தால்
தொட்டிலிலே பூ
அவன் இறந்தால்
நடக்கும் கட்டிலிலும் பூ...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (25-Apr-18, 2:51 am)
Tanglish : poo
பார்வை : 143

மேலே