அழுதக் கண்ணீர்

வங்கக்கடலில் ததும்புவது தண்ணீர் இல்லை

அம்மா மக்கள் நாங்கள் "அழுத- கண்ணீர்" அதில்

எழும் அலைகள் எல்லாம் அலைகள் அல்ல

உங்கள் மக்கள் உங்களை
இழந்த சோக நிலை

கடலோரம் தூங்க சென்ற  தங்கத் தாமரையே

பாமற சாதியின் கோயில்
இல்லாத இறைவியே

கன்னடத்து பைங்களியே
தென்னகத்து தேன்தமிழே

காணவந்த தலைகள் மழை போல் ஜன வெள்ளம்

இதயம்  இயங்கியவரை
நினைத்ததை முடித்தேன்

செய்வேனென சொன்னதை
செய்தேன் மேலும்

சொல்லாததையும் செய்
தேன் இனியும்

மக்கள் உங்களுக்காக என்
இதயம் இயங்காத போது

இருந்தென்ன மடிந்தேன் என  கூறாது கூறிச்சென்றாயோ

ரூபாயைப்போல் நீயில்லாது  ஒரு பொழுது செல்லாது

உயிர் விண் போனாலும்
உடல் மண் போனாலும்

மனதை  விட்டு போகாத
மன மகுடமம்மா நீவீர்

எங்கள் மனதில் பதிந்த
உம்மை தோண்டி

எடுத்திடக் கூடிடுமோ
ஆன்மா சாந்தி பெறுவீர்
•••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி எழுதிய
அழுத கண்ணீர்
கவகதைமணியில்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (25-Apr-18, 12:45 pm)
Tanglish : alutg kanneer
பார்வை : 80

மேலே