குற்றவாளியான பின் தீர்ப்புக்கூற தகுதி இல்லை
ஆண், பெண் இருபாலும் விஷமுற்றிய பெய்களாய் இருக்க,
அவரவர் நிலையில் வாழ்க்கையில் கவனமாய் இருங்கள் என்றே எச்சரிக்க மட்டுமே முடியும்.
கேளாது சென்று அழிந்தால் காப்பாற்ற கடவுளாலும் இல்லை.
ஒழுக்கம், அடக்கம் இரண்டையும் நினையாது தன்னிலை மறந்தால்
அழிவு தான்.
குற்றங்களுக்கு ஆதரவான குரல் கொடுக்க வரும் தொழில் தருமர்களாகிய வழக்கறிஞர்கள் பெருகிய உலகில்,
வேசித்தனமான மனப்போக்கு ஆண், பெண் பாகுபாட்டில்லாமல் தான் இங்கே பரவிக்கிடக்கிறது.
மதம் கொண்டு திசை திருப்பும் வெறித்தனங்களின் ஆழம் புரியாமல் இல்லை.
அவற்றின் ஆணிவேரை அறுக்கும் செயலில் நாம் இன்னும் களமிறங்கவில்லை.
எதைச் சொன்னாலும் அதில் பிழையென்று வாயைத் திறந்தாலே ஒரே அரசியல் நாடகம்.
மதங்களின் சண்டையில் மனிதர்கள் வதைக்கப்பட மதவாதிகள் நடத்தும் வேள்வியில் ஆகுதியாகப் போவது யார்?
மதத்தை மானமென்று கருதி வாழும் கூட்டம்.
கடவுளுக்கும் மதத்திற்கும் சமந்தமே இல்லை.
ஆனால், வாயைத் திறந்தாலே ஒரே தொல்லை.
வார்த்தைகளில் சிக்கனமில்லாதவனாய் வாழ்வதே பாழ் நரகு.
கோபத்தில் இருந்தாலும் அடக்கம் இருக்க வேண்டும்.
ஆத்திரத்தில் அவசரத்தில் ஒழுக்கத்தைக் கைவிட்டால் அதைப் பற்றி பேசும் தகுதி இல்லை நமக்கு.