விடுமுறை

விடுமுறையில் நான் என் அம்மாவுடன் விளையாட போகிறேன் ...
அம்மா 24 மணி நேரமும் உழைக்கும் என் அம்மாவை தவிர யாருடன் நான் விளையாடுவேன் ..
கேட்டதெல்லாம் கொடுக்கும் தெய்வம்
கண்ணுக்கு முன்னே நடக்கும் தெய்வம்
அவளுக்கு என்று சில ஆசைகள் உண்டு
அந்த ஆசையை நிறைவேற்றுவதுதான் என் விடுமுறையின் குறிக்கோள்
அவளிடம் நிறைய திறமைகள் உண்டு
அவளுடைய தாலாட்டுக்கு பிறகுதான் கண்ணதாசனின் பாடலகள்
அவள் என்னை அவளுடைய சேலையில் தூளி கட்டி ஆட்டி விடும் போது
அவள் சிரிக்கின்ற சிரிப்பு
ஆஹா என்ன ஒரு அழகு
இன்றுதான் என் அம்மா சிரித்து நான் பார்க்கிறேன்
இதோ இனி இந்த விடுமுறை முழுதும் என் அம்மாவை சிரிக்க வைத்து
அவளை அழகு படுத்தி பார்க்க போகிறேன்
இன்று நான் பிறந்ததின் பயனை அடைந்தேன்

எழுதியவர் : உமாபாபுஜி (27-Apr-18, 9:21 pm)
Tanglish : vidumurai
பார்வை : 376

மேலே