அன்னையவள் வார்த்த தண்ணீர் அதைப் போற்றிக் காப்போம் வாரீர்

தண்ணீரில் அணுவானோம்!
தண்ணீரில் கருவானோம்!
தண்ணீரில் உருவானோம்!
தண்ணீரால் உயிரானோம்!
தண்ணீரால் உடல்வளர்த்தோம்!
தண்ணீரால் உயிர் வாழ்ந்தோம்!

அந்தத்,
தண்ணீரும் தன்னுதிரம் தன்னைக் கரைத்து
தன்மகவிற் கென்றேதன் உடலில் இருந்து
தாய்ப் பாசம் மீதூரத் தாய் தந்தது!

அணுவாகி இருந்த போதும்,
அவள் வயிற்றில் வளர்ந்த போதும்,
அவள்மகவாய்ப் பிறந்த போதும்,
அவளமுதால் வளர்ந்தபோதும்,
அவள்சமைக்க உண்டபோதும்,
அருந்துணையை மணந்த போதும்,

அணுவாகி இருந்த போதும்,
அதையவட்குத் தந்த போதும்,
அவள்தாயாய் ஆன போதும்,
அவள் வயிற்றில் வளர்ந்த போதும்,
அவள்மகவாய்ப் பிறந்த போதும்,

****************************************************************
நம்மை,
அரவணைத்துக் காத்ததெல்லாம்,
ஆருயிரைத் தந்ததெல்லாம்
அன்னையவள் வார்த்த தண்ணீர்!!
அதைப் போற்றிக் காப்போம் வாரீர்!!

---------------- சித்திரைச் சந்திரன் சித்திரை வல்லி.
18 ஏப்ரல் 2018-புதன் கிழமை.

எழுதியவர் : சித்திரைச் சந்திரன் - (செல (27-Apr-18, 9:14 pm)
பார்வை : 506

மேலே