அம்மா

கருவில் சுமந்த நாள் முதலாய் -என்
கண் காது, மூக்கு என ரசித்தவள்
நீ
உண்ணும் உணவை கூட ஏனக்காய் தவிர்த்து -உன்
தியாகத்தை தொடங்கினாய்..
பத்தியம் என்ற பெயர் வைத்து என்னை பாதுகாக்க வைத்தியம் இருந்தாயே...
கண் விழித்த விடியல் தொடங்கி கண் அயரும் இரவு வரை எடுத்து வைத்த அடிகூட ஏனை பாதிக்காது பார்த்துக்கொண்டாய்...
மண்ணில் பிறந்த நொடிகூட உன் கண்ணில் நீரை வரவைத்தேனோ
மன்னித்துவிடு அம்மா உன் மகள் அல்லவா நான்...
சு. கா

எழுதியவர் : சு. கா (23-Apr-18, 7:33 am)
சேர்த்தது : suganya
Tanglish : amma
பார்வை : 708

மேலே