காதல் அரங்கேற்றம்

!!! காதல் அரங்கேற்றம் !!!

இமைகள்மூடா சிறுகனத்தில், விழிகளின் உரசலால்,
இதயங்களின் பரிமாற்றமாய் நம்காதல்!!!

இதயங்கள்மாற, பார்வையின் முடிவாய்,
வார்த்தைகளின் பரிமாற்றமாய் நம்காதல்!!!

வார்த்தைகள்மாற, மௌனத்தின் முடிவாய்,
எண்ணங்களின் பரிமாற்றமாய் நம்காதல்!!!

எண்ணங்கள்மாற, கனவுகளின் முடிவாய்,
புரிதலின் பரிமாற்றமாய் நம்காதல்!!!

விழிகளின் தொடக்கமாய்,
கனவுகளின் முடிவாய்,
அறங்கேற்றமானது நம்காதல்!!!

அன்புடன் உங்கள்
தௌபீஃக்.

எழுதியவர் : தௌபீக் (29-Apr-18, 4:39 pm)
சேர்த்தது : ஷிபாதௌபீஃக்
பார்வை : 321

மேலே