வீதிகளில் திரியுது நீதிதேவதை
தகுதியிலா தற்குறிகள் ஆடுகின்றன
--தொகுதிக்கே வழியைத் தேடுகின்றன !
பகுதிநேர அலுவலானது பதவிகளும்
--விகிதபேரம் பேசுவது வேலையானது !
அறுபட்ட பட்டம்போல கொள்கைகள்
--விறுவிறு விற்பனையில் பதவிகள் !
வேறுபட்டு நின்றிடும் தமிழர்களால்
--கூறுபோட துடிக்குது கூட்டமொன்று !
நாதியற்ற நிலையிலோ தமிழினம்
--சாதிவெறி சகதியானது தமிழகம் !
வேதனை வலிகள் நினைக்கையில்
--சாதனை கட்சிகள் எண்ணிக்கையில் !
நிர்கதியாய் நிற்கிறது நெடுவாசல்
--நினைப்பதை செய்கிறது ஸ்டெர்லைட் !
கர்நாடக தேர்தலுக்காக காவிரியை
--காத்திருக்க செய்கிறது காவியும் !
நீதிக்கே தண்டனை வழங்குவதால்
--வீதிகளில் திரியுது நீதிதேவதை !
விடிவொன்று வந்திடுமா விரைவில்
--முடிவெடுக்க வந்திடும் தேர்தல் !
பழனி குமார்