கடித்ததும் வலித்தது

உயிர் காற்றை
சுவாசித்தவுடன்
இறந்தது...
தூண்டில் மீன்!
நானோ அசைவம்..

ஒன்றுகூடி இழுத்தார்கள்
ஊர் கூடவில்லை..
ஓரிரு தெருவில் மட்டும்
நுழையாத தேர்!
நானோ மேல் சாதி...

பத்து ரூபாய் தர
மனமில்லை...
கையேந்திய கிழவியிடம்
தியேட்டர் வாசலில்..!
என் பையிலோ
இரண்டாயிரம் தாள்களும்...

விருப்பமில்லாமல் சுவைத்தேன்
கடித்ததும் வலித்தது மனது
உண்மைகளை!

எழுதியவர் : சுரேஷ் குமார் (1-May-18, 12:02 am)
பார்வை : 164

மேலே