தமிழ் தன் எம் மொழி

ஆயிரம் நாவுகள் போதாது அன்னைத்தமிழால்
அம்மாயென அழைக்கும் அமிர்தத்தை ருசிப்பதிற்கு
கோடி செவிகள் போதாது செந்தமிழால்
தித்திக்கும் தேன்னிசையை கேட்ப்பதற்கு
பலகோடி மனங்கள் போதாது கன்னித்தமிழின்
காப்பியத்தை கண்டு அனந்தமடைவதற்கு
உலக மொழியெல்லாம் ஒன்றினைந்தாலும் கூட போதாது
நம் தாய் மொழி தமிழின் தன்னிகரற்ற தன்மையை அடைவதற்கு
நம் தாய் மொழியின் தன்மையறியாத சில மூடர்கள்தான்
பிறமொழியின் மோகத்தில் பித்தம் பிடித்து அலைகிறார்கள்
தமிழை தன் மூச்சாய் சுவாசிக்கும் தமிழர்கள் கூட்டம் ஒரு நாள் ஓங்கி வளரும் - அன்று
உலகமே அவர்களுக்கு தாழ்பணியும் - அப்பொழுது
பிறமொழி பித்தர்கள் கூட தமிழ்தான் என்மொழியென மார்தட்டி மகிழ்ச்சியடைவார்கள் !!!