தமிழனின் மகிழ்ச்சி

நிர்வாணம் நிறையும்
நடுநிசி இருளில்,
நிணச்சோறு உண்ணும்
கலவியின் இன்பமா?
செவ்வானம் முளைக்கும்
விடியற் பொழுதில்,
கட்டில்மணம் கழிந்த
நல்காதலின் மகிழ்ச்சியா?
புணர்விலும் இனிய
புலவியின் சுகமா?
சீ....இல்லை!
ஆதி தமிழை
ஆரிருள் மொய்த்தால்
ஆயுள் ரேகையால்
ஆதவனை இழுத்து
உயரும் தமிழுக்கு
உயிரால் உரம் செய்யும்
வீர மரணமே-என்
உடலும் உயிரும் உணரும்
மகிழ்ச்சி!!!!
உடலை அறுத்தால்
உதிரம் வழியும்- என்
உயிரை அறுத்தால்
உயர் தமிழே வழியும்
வாழ்க தமிழ்!!!