வாழ்த்து சொல்ல
ஆயிரம் கோடி சொந்தங்கள் வைத்திருக்கும் முகநூலுக்கு கிடைக்காத வாய்ப்பு
இந்த தெரு கோடியில்
நிற்பவனுக்கு கிடைத்திருக்கிறது
உன் முகம் பார்த்து வாழ்த்து சொல்ல...👸
உனக்கு என்றவுடன்
முந்தியடித்து வந்த என்
வார்த்தைகளை எல்லாம்
முறையாக
வரிசைபடுத்தி வந்திருக்கிறேன் வாழ்த்து சொல்ல...✒
உனக்கு பரிசு கொடுக்க
பல பொருட்கள் தேடினேன்
ஆனால்
என் தேடுதல் சொன்னது
நீயே இந்த பூமிக்கு
கிடைத்த பரிசு என்று...🎁
அன்று வெயிலிடம் நான் சொல்லிவிட்டேன்
உன் வாழ்த்துக்களை நீயே வைத்துக்கொள் என்று...
அவன் தீண்டினாள் அவள் வாடிடுவாள் என்பதற்காக...🌞
அன்று இடி மின்னலுக்கு எல்லாம் ஏமாற்றமாம் பாவம்
அவளுக்கு தெரியவில்லை அவர்கள் வாழ்த்து சொல்ல வந்தார்கள் என்று...🌩
ஆனால் மழைக்கு மட்டும் மகிழ்சியாம்
கையில் அவள் அவர்களை ஏந்தினாள் என்று...🌧
என் அவள் முதல் அழுகைக்கு கடைசியாக சிரித்தவர்களுக்கு...
அவளின் கடைசி் வரை
சிரிப்பை மட்டுமே
சிந்த என்னோடு என் வாழ்த்துக்களையும் அவளுக்கு சமர்பிக்கிறேன்...❣
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்🎊