தமிழ்சிவா - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  தமிழ்சிவா
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  25-Dec-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Apr-2018
பார்த்தவர்கள்:  132
புள்ளி:  16

என்னைப் பற்றி...

தமிழ் மீது அலாதி அன்பும்,என் மொழி என்று சொல்ல பெரும் கர்வமும் கொண்ட ஒரு பொறியியல் பட்டதாரி

என் படைப்புகள்
தமிழ்சிவா செய்திகள்
தமிழ்சிவா - மாலினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-May-2018 11:39 am

அன்று வந்த நிலா
ஆசையாய் சிரித்தது
கன்னம் குழி விழ
பார்த்தேன் பார்த்தேன்
பருவம் பூக்க பார்த்தேன்
மலர்ந்தேன் நான் நாணி சிவந்தேன்
காற்றில் ஓடும் குளிராய்
கனவில் பூத்த காதல்
வந்துவிடு தோழா
காத்து இருக்கிறேன் வெகு நாளா

மேலும்

😊 17-May-2018 9:10 am
ஓ....ஓ... 17-May-2018 9:07 am
அவரை படிக்கும் பாக்கியம் இன்னும் கிடைக்கவில்லை தோழி! கலீல் ஜீப்ரான் படித்திருக்கிறேன்! 16-May-2018 4:27 pm
எதற்கு "மிக அருமை" தோழி?? 16-May-2018 4:24 pm
தமிழ்சிவா - புதுவைக் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-May-2018 9:55 pm

வானைத் தொட
மனிதன் மனதில்
நுழையக்கூடாத ஆமைகள்
இயலாமை முயலாமை
பொறாமை நேரம் தவறாமை
இல்லாமை கல்லாமை
வறுமை வராமை

படிக்கும் வயதில்
செல்வியின் பின்னால்
சென்றால் ஹனி மூனுக்கு செல்லலாம்
கல்வியின் பின்னால்
சென்றால் தனியாகவே மூனுக்குச் செல்லலாம்

உலகத்துப் பூக்களில்
உயர்ந்த பூ உழைப்பு
அதை உன்னதமாய்ப்
பறிக்காவிடில்
அது உன் தப்பு

உன் ஒவ்வொரு
துளி வேர்வைக்கும்
பயன் துளிர்விட்டு
வேர்வைக்கும்
அதில் உன் பேர்வைக்கும்


கஜினியின் முயற்சி
இந்தியாவின் மணலைப்பிடித்தது
ரஜினியின் முயற்சி
இந்தியர்கள் மனதைப்பிடித்தது

தமிழர் அகத்தைப் பிடித்து
தமிழகத்தைப்

மேலும்

உங்களின் படைப்பு அது தனிச்சிறப்பு... 29-Jun-2018 3:58 pm
சிறப்பு👏👏👏 11-May-2018 10:41 pm
தமிழ்சிவா - தமிழ்சிவா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-May-2018 7:17 pm

கருணைக்கொலை விண்ணப்பம்
கையெழுத்து போடும்
என் இதயம்....

கண்ணீரின்
கடைசி சொட்டுகளையும்
காவு வாங்கியது
காதல்...

அராஜக நினைவுகளில்
ஆயுள் கைதியான
உறக்கம்...

உயிரிலே படிந்த
காதல் கறையை
மரணம் ஊற்றி
கழுவப்பார்க்கிறேன்...

மேலும்

நன்றி😊 12-May-2018 11:02 am
மரணம் ஊற்றி என் காதலை அழிக்கப் பார்க்கிறேன்..என்று எழுதியுள்ளேன்....மரணம் ஒரு சலவை இயந்திரம்... இந்த பிறப்பில் நாம் போன பிறப்பைப் பற்றிய நியாபகங்கள் இருப்பதில்லை..எனவே என் காதலை அழிக்க மரணத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்..இதில் புரியாமல் போவதற்கு என்ன இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை தோழரே! 11-May-2018 4:29 pm
மரணம் ஊற்றி கழுவப் பார்க்கிறேன் நண்பரே மரணத்திற்கு பின் எதை யார் கழுவுவது....................இந்த வரிகளில் அர்த்தம் ஏதும் இல்லை. 11-May-2018 3:32 pm
தமிழ்சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
10-May-2018 7:17 pm

கருணைக்கொலை விண்ணப்பம்
கையெழுத்து போடும்
என் இதயம்....

கண்ணீரின்
கடைசி சொட்டுகளையும்
காவு வாங்கியது
காதல்...

அராஜக நினைவுகளில்
ஆயுள் கைதியான
உறக்கம்...

உயிரிலே படிந்த
காதல் கறையை
மரணம் ஊற்றி
கழுவப்பார்க்கிறேன்...

மேலும்

நன்றி😊 12-May-2018 11:02 am
மரணம் ஊற்றி என் காதலை அழிக்கப் பார்க்கிறேன்..என்று எழுதியுள்ளேன்....மரணம் ஒரு சலவை இயந்திரம்... இந்த பிறப்பில் நாம் போன பிறப்பைப் பற்றிய நியாபகங்கள் இருப்பதில்லை..எனவே என் காதலை அழிக்க மரணத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்..இதில் புரியாமல் போவதற்கு என்ன இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை தோழரே! 11-May-2018 4:29 pm
மரணம் ஊற்றி கழுவப் பார்க்கிறேன் நண்பரே மரணத்திற்கு பின் எதை யார் கழுவுவது....................இந்த வரிகளில் அர்த்தம் ஏதும் இல்லை. 11-May-2018 3:32 pm
paridhi kamaraj அளித்த படைப்பில் (public) paridhi kamaraj மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-May-2018 1:36 am

மெழுகுவர்த்தியை
பற்ற வைத்துவிட்டு
விடிய விடிய
உருகி கிடக்கிறேன் நான்
உன் நினைப்பில்!

நீ பகலில் செடிகளுக்கு
தண்ணீர் ஊற்றுகிறாய்!
அவை இரவில்
மலரச் செய்கிறது இந்த
கனவுப் பூக்களை!

நீ செல்லும் பேருந்தில்
பயணிப்பதையே
பேரானந்தமாய் கொண்டாடும்
நான் உன் அருகில்
அமர்ந்து வந்தால்?!!!

எனக்கு ஒரு ஆசை!
மழை பொழியும் நாட்களில்
வீசும் மண்வாசனையை
பிடித்து வைக்க வேண்டும்
நீயதை நுகர்ந்திட!

வெடிகுண்டு தேவையில்லை
நீ சூடும் குண்டுமல்லியே
போதும்!பார்
நான் உயிரற்று
கிடக்கிறேன்!

மேலும்

தங்களின் கருத்திற்கு நன்றி 10-May-2018 4:09 pm
அற்புதம்!!!! மனதில் நீங்காமல் பற்றிக்கொள்ளும் வரிகள்👏👏👏 10-May-2018 3:28 pm
நன்றி யோகி 09-May-2018 7:25 pm
ப்பா....செம😄😃 09-May-2018 7:21 pm
தமிழ்சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
07-May-2018 3:23 pm

நிர்வாணம் நிறையும்
நடுநிசி இருளில்,
நிணச்சோறு உண்ணும்
கலவியின் இன்பமா?

செவ்வானம் முளைக்கும்
விடியற் பொழுதில்,
கட்டில்மணம் கழிந்த
நல்காதலின் மகிழ்ச்சியா?

புணர்விலும் இனிய
புலவியின் சுகமா?

சீ....இல்லை!

ஆதி தமிழை
ஆரிருள் மொய்த்தால்
ஆயுள் ரேகையால்
ஆதவனை இழுத்து
உயரும் தமிழுக்கு
உயிரால் உரம் செய்யும்
வீர மரணமே-என்
உடலும் உயிரும் உணரும்
மகிழ்ச்சி!!!!

உடலை அறுத்தால்
உதிரம் வழியும்- என்
உயிரை அறுத்தால்
உயர் தமிழே வழியும்
வாழ்க தமிழ்!!!

மேலும்

தமிழ்சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
05-May-2018 5:01 pm

ஆயிரம் இரவுகளின்
தாகத்தால்
தொண்டைக்குழியில்
வார்த்தை சடலங்கள்!

மனதின் எண்ணங்களுக்கு
மீசை அரும்பிய நேரம்!

சிரிப்புகள்
சிக்கனமாய்
செலவுசெய்யப்பட்டன!

உரையாடல்கள்
ஊதி அணைக்கப்பட்டன!

மொழியின் மரணத்திற்கு
"மௌனம்"
மௌன அஞ்சலி செய்தது!

படரும் போர்வைதீபத்தில்
ஹார்மோன்கள்
நெய் ஊற்றியது!

ஆழமான பார்வைகள்
தோண்டப்பட்டன-அதில்
நாணம் ஊற்றி மூடப்பட்டன!

கட்டிலின் வெப்பத்தில்
நாம் வேகாமல்
போவோமா?

விடியலின் விழிப்பில்
நாம் புதையலைத்
தொலைப்போமா?

என்ற தவிப்புகளை
இயல்பாய் பூர்த்திசெய்த
இரவு,
"முதல் இரவு"

மேலும்

மிக்கநன்றி நண்பரே!!! 06-May-2018 1:23 pm
அருமை தோழர் தமிழ் சிவா...கவிதை நன்று ...அழகு.... 06-May-2018 1:19 pm
நிச்சயமாக!!! 05-May-2018 9:46 pm
நன்று.ஆவல்களை வளர்த்துக்கொண்டு சமுக பார்வைக்கு செல்லுங்கள். 05-May-2018 9:27 pm
தமிழ்சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
04-May-2018 3:16 pm

சுருங்கி விரியும்
என் இருதய அறையில்
நிரம்பி வழியும்
என் நெஞ்சாத்தியே!!!

காற்றில் அசையும்-உன்
காவிரிக் கூந்தலில்
நிதம் மிதக்கும்
என்னிரு விழிஇலைகள்

உன் உதடின் ஓரம்
புன்னகை கசிய
என் மனதில் நிகழும்
வானிலை மாற்றங்கள்!

உன் ஓரப்பார்வை
என் உயிரை உரச
என் கடிகாரச்சாலையில்
நிறையும்
வேகத்தடைகள்!

தார்விரித்த
வீதிகள்மேல்
தானே பூக்கும்
மலர்கள்!
நீ நடந்து சென்ற
சாலைகளில் மட்டும்!

உன்னை
கனவில் காணவே
உறக்கம் கொள்கிறேன்,
நேரில் காணவே
கல்லூரி செல்கிறேன்!!!

மேலும்

மகிழ்ச்சி தோழர்.... 05-May-2018 9:46 am
நன்றி தோழி....மிகப்பெரிய அங்கிகாரமாகப் பார்க்கிறேன் தோழி உங்கள் கருத்தை!!! 05-May-2018 9:34 am
அருமை அருமை தோழர் தமிழ்சிவா..கற்பனைகள் பெருகட்டும் கவிதைகள் மேலும் சிறக்கட்டும்...வாழ்த்துகள் தோழர்...அருமை .... 05-May-2018 9:11 am
ஊக்க மருந்தாகப் பார்க்கிறேன் உங்கள் கருத்தை!!! நன்றி!!! 05-May-2018 8:34 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

இவர் பின்தொடர்பவர்கள் (12)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (12)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
மேலே