முதல் இரவு

ஆயிரம் இரவுகளின்
தாகத்தால்
தொண்டைக்குழியில்
வார்த்தை சடலங்கள்!
மனதின் எண்ணங்களுக்கு
மீசை அரும்பிய நேரம்!
சிரிப்புகள்
சிக்கனமாய்
செலவுசெய்யப்பட்டன!
உரையாடல்கள்
ஊதி அணைக்கப்பட்டன!
மொழியின் மரணத்திற்கு
"மௌனம்"
மௌன அஞ்சலி செய்தது!
படரும் போர்வைதீபத்தில்
ஹார்மோன்கள்
நெய் ஊற்றியது!
ஆழமான பார்வைகள்
தோண்டப்பட்டன-அதில்
நாணம் ஊற்றி மூடப்பட்டன!
கட்டிலின் வெப்பத்தில்
நாம் வேகாமல்
போவோமா?
விடியலின் விழிப்பில்
நாம் புதையலைத்
தொலைப்போமா?
என்ற தவிப்புகளை
இயல்பாய் பூர்த்திசெய்த
இரவு,
"முதல் இரவு"