கனவுப் பூக்கள்

மெழுகுவர்த்தியை
பற்ற வைத்துவிட்டு
விடிய விடிய
உருகி கிடக்கிறேன் நான்
உன் நினைப்பில்!

நீ பகலில் செடிகளுக்கு
தண்ணீர் ஊற்றுகிறாய்!
அவை இரவில்
மலரச் செய்கிறது இந்த
கனவுப் பூக்களை!

நீ செல்லும் பேருந்தில்
பயணிப்பதையே
பேரானந்தமாய் கொண்டாடும்
நான் உன் அருகில்
அமர்ந்து வந்தால்?!!!

எனக்கு ஒரு ஆசை!
மழை பொழியும் நாட்களில்
வீசும் மண்வாசனையை
பிடித்து வைக்க வேண்டும்
நீயதை நுகர்ந்திட!

வெடிகுண்டு தேவையில்லை
நீ சூடும் குண்டுமல்லியே
போதும்!பார்
நான் உயிரற்று
கிடக்கிறேன்!

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (9-May-18, 1:36 am)
சேர்த்தது : paridhi kamaraj
Tanglish : kanavup pookal
பார்வை : 453

மேலே