காதல் கறை

கருணைக்கொலை விண்ணப்பம்
கையெழுத்து போடும்
என் இதயம்....

கண்ணீரின்
கடைசி சொட்டுகளையும்
காவு வாங்கியது
காதல்...

அராஜக நினைவுகளில்
ஆயுள் கைதியான
உறக்கம்...

உயிரிலே படிந்த
காதல் கறையை
மரணம் ஊற்றி
கழுவப்பார்க்கிறேன்...

எழுதியவர் : தமிழ்சிவா (10-May-18, 7:17 pm)
சேர்த்தது : தமிழ்சிவா
பார்வை : 249

மேலே