வரம் தருவாய் கடவுளே
கடவுளே எனக்கு கால்கொலுசாய் மாறும் வரம் வேண்டும்
என்றும் என் காதலியின் கால்களில் சினுங்கிக்கொண்டிருப்பதற்காக
கண்ணனே எனக்கு காதணியாய் மாறும் வரம் வேண்டும்
என்றும் அவள் காதோரத்தில் தொங்குவதற்காக
மாயவனே எனக்கு மணலாய் மாறும் வரம் வேண்டும்
அவள் நிழலையும் என்மேல் தாங்குவதற்காக
ஆண்டவனே எனக்கு அவள் கைகளாய் பிறக்கும் வரம் வேண்டும்
என்றும் ஆயுள்ரேகையாய் அவளுடன் வாழ்வதற்காக
இத்தனை வரங்களையும் நீ தர இறைவா
என் உடல் மொத்தம் கேட்டாலும் அவைற்றை
மலர்களாக்கி உன் பாதங்களில் மாலையாக்குகிறேன் - ஆனால்
என் இதயத்தை மட்டும் தர முடியாது
அதை ஏற்கனவே என் காதலிக்கு
காணிக்கையாக்கிவிட்டேன் கடவுளே!!!