ஒன்று சேருமா

ஊரெல்லாம்
தேடினேன்
உனை
காண்பதற்காக......!

சிறகடித்து
பரந்த நாட்கள்
நினைவாக
உறங்கியது
கூட்டுக்குள்ளே (மனம்)..........!!

விழி திறந்து
பார்த்தேன்
தூசி
விழுந்ததது
என் கண்ணுக்குள்ளே........!!

எந்தன்
நிலை
மாறினாலும்
உந்தன்
நினைவு மாறிடுமா....!!

உந்தன்
மனம்
மாறினாலுமா!
எந்தன்
மனம் மாறிடுமா!

போட்டு
உடைத்த
மண்பாண்டம்
ஒட்ட முடியுமா
ஒன்று சேருமா...!!

எழுதியவர் : (10-May-18, 7:06 pm)
சேர்த்தது : நாகூர் லெத்தீப்
பார்வை : 42

மேலே