தாய் மண்ணே வணக்கம்
தாய் மண்ணே வணக்கம் !
எங்கும்,
தமிழ்மொழியே ஒலிக்கும் !
தலைவணங்கி நிற்போம்..
எம் தாய்
தமிழன்னையைக் காப்போம்!
உலகம் வியக்கும்,
எம் மண்ணின் புகழ்
பாரெங்கும் மணக்கும்!
வானம் கீழிறங்கும்,
எம் தாய் தமிழுக்குச்
செவிச்சாய்க்கும்!
அருவிகள் இசையாகும்;
பறவைகள் இசைப்பாடும்;
இயற்கை இறையாய் வணங்கும்,
எம் தமிழ் மண்ணினை....
பூக்கள் மண்டியிடும் ;
சிற்பங்கள் உயிர்த்தெழும் ;
மலை,கடலென அனைத்தும்
வியந்துப் பார்க்கும் ...,
எம் தமிழரின் வீரத்தினை!!!
கல்வி , செல்வம், வீரமென
அனைத்திலும் எம் முத்தமிழே
முன்நிற்கும்...
எம் தமிழனே ,
வெற்றியடைவான்...
காலங்கள் கடந்தாலும்..
அறிவியல் ,
ஆயிரம் வளர்ந்தாலும்...
உயிரே பிரியும்
நிலைமை வந்தாலும்,
தமிழ் மொழியினை விழியோடு
இமையாய்க் காப்போம்....
தமிழ் மண்ணினை உயிராய்
வணங்கி நிற்போம்....
இமயமாக உயர்ந்து, எங்கள்
இதயமாக வாழ்ந்து , எங்களை
இறைவனாய் இரட்சிக்கும்,
தமிழ் மண்ணே வணக்கம்!!!!