ஒன்று என்பது புள்ளி 8 அல்ல

தசமத்தில் மாறிப்போகும்
யாவும் நொடியில்
தொடுவதை தாண்டி தீண்டினால்....
அனைத்து காற்றும்
மூங்கில் துளையில்
நாதமாவதில்லை...
அனைத்து மூங்கிலும்
புல்லாங்குழல் ஆவதுமில்லை
நொடிந்த பொழுதுகளால்...
நாம் நொடித்த
பொழுதுகளால்....?

எழுதியவர் : சுரேஷ் குமார் (10-May-18, 11:34 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 348

மேலே