அடி பெண்ணே!

கையில்
மலர் வளையத்தை
வைத்துக் கொண்டு
என்ன பெண்ணே!
யோசிக்கிறாய்...?
இத்தனை கல்லறையில்
என் கல்லறை
எது என்று
எப்படி கண்டு பிடிப்பது
என்று தானே...!
எந்தக் கல்லறை
ஈரமாக இருக்கிறதோ
அதுதான்
என் கல்லறை...
ஆம்....!
நான்
இறந்து விட்டேன் என்பதற்காக..
'உன் நினைவால்
வடியும் கண்ணீர்'
நின்றிடவாப்போகிறது....?
-கவிதை ரசிகன்