வலிகளின் வார்த்தைகள்
அடிப்படை
தேவைகள்
தீர்ந்த பின்னும்
போதுமென
நில்லாது
அலைகிறது
அலையென
அலைகளால்
அடங்கிய
அபூர்வ மனது
அடக்க தெரியாமல்
எனை அடங்கி
நிமிர்கிறது
அசுர மனது
காலங்களினால்
பின்னபட்ட
சிலந்தி வலையில்
வாழ்வினை
இழந்தபடி
உயிர் மட்டும்
சுமந்தபடி
சுற்றி
திரியுதடி
பாவப்பட்ட
பெண்ணடி...
அவள் ஓர்
பாவப்பட்ட
பெண்ணடி....
-PRIYA