உதிர்வு

பின்தொடரும் நிழல்களாய்
குற்றவாளிகள் பின்னும் ஒருகூட்டம்.

அழுக்குத் தேமல் என்றால் கூட
அழுத்தித் தேய்த்துவிடலாம்.

பெருநோய் பீடித்த சமூகம்
ஒவ்வொரு விரலாய்
அறத்தை
உதிர்த்துக் கொண்டிருக்கிறது.

எழுதியவர் : வானம்பாடி கனவுதாசன் (12-May-18, 5:46 pm)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 73

மேலே